செய்தி
ஒலிவடிவம்:
ஜெனிவாவில் இராஜதந்திரப் போர் உக்கிரம்! இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் 23 இல் வாக்கெடுப்பு
[ திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012, 06:18.07 AM GMT ]
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் உக்கிரமடைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது. இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் மாதம் 23 ஆம் திகதியே வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவருகின்றது.

இலங்கைக்கு எதிரான பிரேரணையை தாம் ஆதரிக்கப்போவதாக அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையிலும், தனக்கு எதிரான பிரேரணையை தோற்கடிப்பதற்கு இலங்கை கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையிலுமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஜெனிவாக் கூட்டத் தொடர் ஆரம்பமாகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்ஸிக்கோ, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட முக்கியமான நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, உகண்டா, மலே சியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, குவைத், கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன என்று அறிய முடிகின்றது.

ஜெனிவா விரைந்துள்ள இலங்கை அமைச்சர்கள் குழாம், தமது நாட்டுக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த போதிலும் மேற்குலகத்திடம் இருந்து அக்குழுவிற்கு சாதகமானதொரு பதில் கிட்டவில்லை என்றே ஜெனிவாவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாத் தொடர் இன்று ஆரம்பமானாலும் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை மீது மார்ச் 23 ஆம் திகதியே வாக்கெடுப்பு நடத்தப்படும் எனத் தெரியவருகின்றது.

மேலும், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்படும் பிரேரணையில் முக்கியமான சில விடயங்களைப் பரிந்துரைப்பதற்கும் மேற்குலக நாடுகள் தீர்மானித்துள்ளன என அறியக்கூடியதாகவுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 23-12-2014, 12:10.34 AM ]
சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் இரகசிய உடன்படிக்கை குற்றச்சாட்டு பொய்யானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 11:52.58 PM ]
அரசாங்கம் இராணுவத்தை இழிவுபடுத்துவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 11:43.18 PM ]
எதிர்வரும் ஜனாதிபதி தோதலின் போது தேவையென்றால் இரண்டாம், மூன்றாம் விருப்பு வாக்கினையும் அளிக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 11:32.27 PM ]

நான் இலங்கை வந்தது அறக்கட்டளை சார்பாக அங்குள்ள கலைஞர் பெருமக்களை சந்திப்பதற்காகவும் அவர்களைக் கௌரவிப்பதற்காகவுமே வந்த ஒரு கலைஞன். ஆனால் அந்த அமைச்சர் என்னை வந்து சந்தித்த விடயத்தை ஒரு விசமாக உலகம் பூராகப் பரப்பி உலகத் தமிழர்கள் அத்தனை பேர்களுக்கும் என்மீது அவப் பெயரை உண்டாக்க சிலர் நினைக்கிறார்கள் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்தார். 

[ Monday, 22-12-2014, 11:13.09 PM ]
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் சட்டவிரோத ஆயுதங்களைக் களைவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
[ Monday, 22-12-2014 13:49:05 GMT ]
பிணத்திலிருந்து எபோலா பரவுவதால், இறுதிச்சடங்கை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு சியாரா லியோன் வலியுறுத்தியுள்ளது.
[ Monday, 22-12-2014 13:23:00 GMT ]
புதுவை அரவிந்தர் ஆசிரம பெண்ணுக்கு மது கொடுத்து மாறி மாறி கற்பழித்தோம் என கைதான வாலிபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
[ Monday, 22-12-2014 13:29:18 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததற்கு பல காரணங்களை கூறியுள்ளார் இந்திய அணித்தலைவர் டோனி.
[ Monday, 22-12-2014 11:27:33 GMT ]
தற்போது உள்ள வாழ்க்கை முறையில் அனைவரையும் சர்க்கரை நோய் எளிதாக தாக்கிவிடுகிறது.
[ Monday, 22-12-2014 06:10:08 GMT ]
கத்தி திரைப்படம் 50 நாட்களை கடந்து தமிழகத்தின் சில திரையரங்குகளில் மட்டும் ஓடுகிறது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.