செய்தி
ஒலிவடிவம்:
 Photo
கிளிநொச்சியில் இராணுவ சிப்பாய்க்கும் முன்னாள் பெண் போராளிக்கும் திருமணம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 01:44.11 AM GMT ] [ புதினப்பலகை ]
கிளிநொச்சியில், இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் இலங்கை ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி  செயலகத்தின் ஏற்பாட்டில் கல்கமுவ பிரதேசத்தைச்  சேர்ந்த ஈ.எம்.டி.சந்துருவன் என்ற இலங்கை இராணுவச் சிப்பாய்க்கும், விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் பெண் போராளியான சந்திரசேகரன் சர்மிளாவுக்கும் கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 18 வயதான சர்மிளா புனர்வாழ்வு பெற்ற பின்னர் விடுதலை செய்யப்பட்டவராவார். 20 வயதான சந்துருவன் கிளிநொச்சியில் நிலைகொண்டுள்ள 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார்.

நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு நடவடிக்கையாகவே இந்தத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில், சர்மிளாவின் தந்தை சந்திரசேகரன் கல்கமுவ பிரதேசத்தில் சந்துருவனின் வீட்டுக்கு சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 22-12-2014, 09:46.31 AM ]
கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 09:41.38 AM ]

ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதியிடம் உண்மையான களநிலவர அறிக்கையை கொடுத்து மீ்ண்டும் அடிவாங்க தயாரில்லை என அரச புலனாய்வு சேவையின் பிரதான அதிகாரி தெரிவித்துள்ளார்.

[ Monday, 22-12-2014, 09:21.25 AM ]
இலங்கையில் 40வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா சம்பாதிக்க முடியாமலும், 50வீதமான மக்கள் ஒரு நாளைக்கு 260ரூபா செலவிட முடியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஜனாதிபதியின் ஒரு நாள் செலவீனம் 2கோடியே 65லட்சம் ரூபா. இத்தகைய அநீதியான ஆட்சி தேவை தானா? என தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது.
[ Monday, 22-12-2014, 09:20.04 AM ]
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்கத்துக்கு தனது ஆதரவினை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
[ Monday, 22-12-2014, 08:23.08 AM ]
இந்த நாட்டில் பணக்காரர்களாக மாத்திரம் ஒரு அரசாங்கம் இருக்கின்றது என்றால் அது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம். அவருடைய ஊழலை நிறுத்தி அந்த பணத்தை மிச்சப்படுத்தினால் சாதாரண மக்களுக்கு அன்றாட வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் என எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
[ Monday, 22-12-2014 09:46:43 GMT ]
எங்கள் நாட்டின் மீது தொடர்ந்து குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்தப்படும் என்று வடக்கொரியா எச்சரித்துள்ளது.
[ Monday, 22-12-2014 06:06:25 GMT ]
விஜயகாந்திற்கு தமிழில் பிடிக்காத வார்த்தை நன்றி என்று அதிமுக ஆதரவு எம்எல்ஏ சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.
[ Monday, 22-12-2014 03:28:38 GMT ]
கழகங்களுக்கிடையிலான பிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி சம்பியன் பட்டம் வென்றது.
[ Monday, 22-12-2014 07:51:35 GMT ]
பொதுவாக எல்லா பெண்களுக்கும் இருக்கும் ஒரு ஆசை தான் தாய்மையை அடைவது தான்.
[ Sunday, 21-12-2014 23:53:41 GMT ]
நெடுந்தீவு முகிலன் அவர்களின் வரிகளில் ஜெயந்தன் அவர்கள் இசையமைத்திருக்கும் பாடல் யாழில் தொலைந்த காதல்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.