செய்தி
லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்! சந்தேகமான இருவர் கைது
[ சனிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2013, 03:26.17 AM GMT ]
நேற்று லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம், அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, இடையில் கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

இதுகுறித்து தெரியவருவதாவது,

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ஏ 330  என்ற இலக்கமுடைய விமானம் கொழும்பில் இருந்து நேற்று 267 பயணிகளுடன் லண்டன் ஹீத்ரோ விமானநிலையம் நோக்கி புறப்பட்டது.

இந்தநிலையில் அதில் பயணித்த இருவர் விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்ற சந்தேகம் ஏற்படவே, விமானம் அவசரமாக கிழக்கு லண்டனில் உள்ள ஸ்டான்டெட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இதனையடுத்து விமானத்துக்குள் பிரவேசித்த எசெக்ஸ் நகரப் பொலிஸார் அங்கு விமானத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட இரண்டு பேரையும் கைதுசெய்தனர்.

எனினும் அவர்கள் இருவரும் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்ற விடயம் வெளியாகவில்லை.

இதன்போது பயணிகளும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர் அவர்கள் ஹீத்ரோ விமான நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 25-10-2014, 07:51.13 AM ]
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவகர் ரி.நந்தகுமார் வீட்டின் மீது கடந்த 21ம் திகதி இரவு10.50 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து நின்று மிகப்பெரிய கற்களை வீட்டின் மீது வீசி சேதப்படுத்தியுள்ளனர்.
[ Saturday, 25-10-2014, 07:42.50 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் துண்டு விழும் முழுத் தொகை 521 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
[ Saturday, 25-10-2014, 07:31.36 AM ]
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டமானது மக்களை ஏமாற்றும் கபட நாடகம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-10-2014, 07:05.01 AM ]
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க தயார் என அறிவித்ததை தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
[ Saturday, 25-10-2014, 06:21.22 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாசிசவாத ரீதியான அரசியலை நவசமசமாஜக் கட்சி எதிர்ப்பதாக அதன் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-10-2014 08:37:31 GMT ]
ஈராக்-சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.எஸ் தீவிரவாதிகள் குர்திஷ் பெண் போராளிகளை கண்டு அஞ்சி ஓடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Saturday, 25-10-2014 06:29:22 GMT ]
நான் முதலமைச்சர் வேட்பாளராக மோடி எனக்கு ஆதரவு தருவார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
[ Saturday, 25-10-2014 06:49:30 GMT ]
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணித்தலைவர் டோனி, புதுமையாக செயல்படத் தவறுகிறார் என்று மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 25-10-2014 07:19:32 GMT ]
எப்போதும் நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம், எதிர்ப்பு சக்தி குறையும் பட்சத்தில் நோய்கள் வந்து குடியேறிவிடும்.
[ Saturday, 25-10-2014 01:51:39 GMT ]
சினிஉலகம் ஊடக அணுசரனையில் நிரூஷாந்த் இயக்கி, ஒளிப்பதிவு செய்து, நடித்து வரும் குறும்படம் ரத்தச்சுவடு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 24-10-2014 02:27:22 ]
1956 ம் ஆண்டிலிருந்து 60 வருடங்களாக இலங்கையில் தமிழ் இனம் சிந்திய இரத்தம், இழந்த உயிர்கள், உடமைகள் சொத்துக்கள் எண்ணி முடியாது.