செய்தி
(2ம் இணைப்பு)
Photo
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் - வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:58.31 AM GMT ]
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.

கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் வட மாகண சபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஜக்கிய முன்னனி எனும் கட்சியினாலேயே இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடியலுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் மறைந்த ஈழ தமிழர் தந்தை செல்வாவின் வழியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்  இரட்டை இலை  சின்னத்தில் போட்டியிடுவதாக குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சியமாக வெற்றி பெறும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் பதவியை பெறும் நோக்கத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.

அடுத்து நடைபெறவுள்ள பிரதான தேர்தலில் அரசியலில் ஈடுபடுவதற்கு தேவையான பின்னணியை கட்டியெழுப்புவதற்காகவே அங்கு தேர்தலில் போட்டியிடுகிறோம்.

வடக்கு மாகாணத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த பிரதேசத்தில் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு தேவையான கீழ் மட்டத்திலான அமைப்புகளை வலுப்படுத்த உள்ளோம்.

அதற்கு தகுதியான பிரதிநிதிகளை பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்

அதுவேளை வடக்கு தவிர்ந்த ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிடும் வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கம் ஆச்சரியமடையும் வகையிலான தேர்தல் முடிவுகளை எமது கட்சி பெறும் என்றார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 01-11-2014, 04:48.35 AM ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா மீது இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
[ Saturday, 01-11-2014, 03:52.39 AM ]

மீரியபெத்த மண்சரிவு காரணமாக தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

[ Saturday, 01-11-2014, 02:20.16 AM ]
16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
[ Saturday, 01-11-2014, 02:04.09 AM ]
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமனல பகுதியை சேர்ந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர், மண் சரிவு அபாயம் காரணமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
[ Saturday, 01-11-2014, 01:50.30 AM ]
ஆபத்தான இடங்களில் தங்கியிருக்கும் மக்கள் பலவந்தமாகவேனும் வெளியேற்றப்படுவர் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
[ Saturday, 01-11-2014 05:05:29 GMT ]
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் 2 மகன்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
[ Friday, 31-10-2014 11:52:07 GMT ]
இந்தியாவில் முதன்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
[ Friday, 31-10-2014 10:56:04 GMT ]
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் அமைத்த களத்தடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
[ Friday, 31-10-2014 12:08:57 GMT ]
உடல் உறுப்புகளைப் போலவே இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.
[ Friday, 31-10-2014 06:20:43 GMT ]
ஐ தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 31-10-2014 02:47:48 ]
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.