செய்தி
தமிழ் இளைஞர் மீது இலங்கை இராணுவத்தினர் காடைத்தனமான தாக்குதல்! பரந்தனில் சம்பவம்
[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 02:56.52 AM GMT ]
சிங்கள இளைஞனுக்காக தமிழ் இளைஞர் ஒருவரை இலங்கை இராணுவத்தினர் கட்டி வைத்து கடுமையாக தாக்கிய சம்பவத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு பரந்தன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் 160ம் கட்டை பரந்தன் பகுதியைச் சேர்ந்த ச.பிரகாஷ் (வயது 27) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பரந்தன் பகுதியில் சிங்கள இளைஞர் ஒருவருக்கும் தமிழ் இளைஞர் ஒருவருக்கும் இடையில் முறுகல் நிலை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் இது தொடர்பாக சிங்கள இளைஞர் அருகிலுள்ள இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினருக்கு தகவல் தெரிவிதுள்ளார்.

இதன்பின்னர் அங்கு வந்த இராணுவத்தினர் அவரது கையை பின்னால் கட்டி வைத்து பொல்லுகளால் தாக்கியுள்ளனர்.

ஆயினும் பொது மக்கள் ஒன்று கூடவே அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

படுகாயமடைந்த இளைஞரை பொது மக்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 29-11-2014, 07:52.51 AM ]

சாவகச்சேரி, கச்சாய் பகுதியிலுள்ள ஆலயமொன்றினுள் நஞ்சருந்திய நிலையில் மீட்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

[ Saturday, 29-11-2014, 07:37.15 AM ]
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற பின் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க போகிறார் என்று அரசாங்கம் முன்னெடுத்து வரும் பிரசாரம் அரசாங்கத்திற்கே பாதமாகி இருப்பதால், அதனை நிறுத்த வேண்டும் என புலனாய்வுப் பிரிவின் அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
[ Saturday, 29-11-2014, 07:26.13 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னிடம் இருப்பதாக கூறும் அமைச்சர்களின் ஊழல், மோசடிகள் பற்றிய கோப்புகளை உடனடியாக வெளியிட வேண்டும் என ஜே.வி.பியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Saturday, 29-11-2014, 07:11.37 AM ]
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகிய சுப்ரமணிய சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.


[ Saturday, 29-11-2014, 07:03.51 AM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது முறை பெற்ற வெற்றியை விட இம்முறை மிக இலகுவாக வெற்றி பெறுவார் என ஜனாதிபதியின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
[ Saturday, 29-11-2014 06:17:43 GMT ]
ஈரானிய பெண்மணி ஒருவர் தனது முகத்தில் இருந்த பர்தா துணியை அகற்றிவிட்டு, ரயிலில் ஆடிப்பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
[ Saturday, 29-11-2014 06:28:04 GMT ]
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 29-11-2014 03:11:22 GMT ]
பிலிப் ஹியூக்ஸ் மரணத்தையடுத்து இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
[ Saturday, 29-11-2014 06:20:57 GMT ]
உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் எபோலா வைரஸ், தற்போது கணனியையும் தாக்கி வருகின்றது.
[ Saturday, 29-11-2014 00:19:01 GMT ]
நிழல் தேடும் கலைஞன் அவர்களின் தயாரிப்பில் சசிகரன் அவர்கள் தயாரித்து வரும் குறும்படம் கனவு விதி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 27-11-2014 12:23:40 ] []
தமிழனின் மனதினில் மாவீரர் தினம் என்றும் மாறாது தமிழ் இனத்தின் விடுதலை வீரர்களின் நினைவுகளை தடுக்க சிங்களம் நினைத்தால் அதற்கு எதிர் காலம் பதில் சொல்லும்.