செய்தி
மருதானை விபச்சார விடுதியொன்றில் மட்டக்களப்பை சேர்ந்த பெண்கள் கைது! அதிர்ச்சித் தகவல்!
[ வெள்ளிக்கிழமை, 16 ஓகஸ்ட் 2013, 11:35.53 PM GMT ]
கொழும்பு, மருதானைப் பகுதியில் புதன்கிழமை விபச்சார விடுதியொன்றை பொலிஸார் முற்றுகையிட்டபோது கைது செய்யப்பட்ட பெண்களில் அதிகமானோர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் வேலைக்கு செல்கின்றோம் என்று சென்றவர்களே இவ்வாறு விபச்சாரத்துக்குள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதானையில் உள்ள வீடு ஒன்றை நீதிமன்றத்தின் முன் அனுமதியை பெற்று குற்றச் செயல்கள் மற்றும் ஊழல்களுக்கு எதிரான பொலிஸார் சோதனை செய்த போது 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் ஒருவர் கர்ப்பிணி. கணவர் இவரை கைவிட்டு சென்று விட்டார். நிதித் தேவைகள், வாழ்வாதாரம் போன்றவற்றை நிறைவு செய்கின்றமைக்காக இப்பெண் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

கைதானவர்களில் அநேகர் 24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். களுவாஞ்சிக்குடி, ஏறாவூர் போன்ற இடங்களை சேர்ந்தவர்கள். ஒருவர் ஜாஎலவை சேர்ந்தவர்.

இவர்கள் அனைவரும் மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். இந்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரத்துக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மட்டக்களப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு செல்வதானது வேதனைக்குரியமாகவுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 24-11-2014, 03:47.00 PM ]

எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதற்கான காரணத்தினை அவரது  சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

[ Monday, 24-11-2014, 03:35.53 PM ]
தமிழ் மக்களின் போராட்டங்களை பலவீனப்படுத்தியது போல தற்போது ஆளும் அரசுக்குள்ளும் அமைச்சர்களை பிரித்தெடுத்து நாட்டை பலவீனப்படுத்தும் செயற்றிட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி கவனம் செலுத்தி வருகிறது குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வன்னி மேம்பாட்டு பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
[ Monday, 24-11-2014, 03:27.36 PM ]

சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு அரசாங்க தலைவர்கள் செல்வதை ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா இன்று இக்கருத்தை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

[ Monday, 24-11-2014, 03:07.39 PM ]
மஹிந்த ராஜபக்சவின் காலம் முடிவடையப் போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.
[ Monday, 24-11-2014, 02:24.19 PM ]
தனது அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஒருவரே தனக்கு எதிரான வேட்பாளராக வருவார் என்பதைக் நினைத்துப் பார்த்திராத மகிந்தவிற்கு இது ஒரு புதிய யுகம்.
[ Monday, 24-11-2014 12:27:19 GMT ]
செவ்வாயில் மனித மண்டை ஓடு இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது.
[ Monday, 24-11-2014 08:23:42 GMT ]
தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுத் திட்டங்களில் இடம்பெற்றுள்ள ஜெயலலிதாவின் படத்தினை அகற்றக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Monday, 24-11-2014 07:27:36 GMT ]
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு களமிறங்க தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரி ஆஷ்லே டி சில்வா கூறியுள்ளார்.
[ Monday, 24-11-2014 11:55:43 GMT ]
சர்க்கரை வள்ளிக் கிழங்கு ருசிக்க சுவையானதாக மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சத்துகளையும் அதிக அளவில் கொண்டுள்ளது.
[ Monday, 24-11-2014 03:10:01 GMT ]
சமூக வலைத்தளங்களால் என்றும் திரைப்பிரபலங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான் போல.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Monday, 24-11-2014 06:01:22 ]
தமது ஆட்சி காலம் சட்ட ரீதியாக முடிந்த பின்னரும், தாம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்காக அரசியல் யாப்பை மாற்றி, தில்லுமுல்லு மோசடி தேர்தல்களை நடத்தி தமது ஆயுட்காலம் வரை ஆட்சியில் இருக்க திட்டமிட்ட, ஆட்சி வெறி கொண்ட பல தலைவர்கள், மக்கள் எழுச்சியினால் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.