செய்தி
நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் இலங்கை பயணத்தை ரத்து செய்யுங்கள்! ஜெயந்தி நடராஜன் வேண்டுகோள்
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 09:31.31 AM GMT ]
தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை பயணத்தை மேற்கொண்டால் அது அப்பாவி ஈழத்தமிழர்களின் விஷயத்தில் ஆழமான காயம் ஏற்படுத்துவதாக அமையும். எனவே ஈழத்தமிழர்கள் வேதனை மற்றும் தமிழர்களின் கோபத்தை உணர்ந்து உங்கள் பயணத்தை ரத்து செய்யுமாறு  மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் டெல்லியில் உள்ள இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

இலங்கைக்கு எம்.பி.க்கள் குழு ஒன்றை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்த இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு பரிந்துரை செய்து இருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை பார்த்துவிட்டு இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன்.

இந்திய குடிமகள் என்ற ரீதியிலும், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்ற முறையில் 2009-ம் ஆண்டு போரின் போதும், அதற்கு பிறகும் இலங்கை அரசு அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகுந்த வேதனையை எனக்கு ஏற்படுத்தியது.

இறுதிக் கட்ட போரின்போது 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அகற்ற வேண்டும் என்று ஐ.நா.சபை பலதடவை கூறிவிட்டது. ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை.

இலங்கையின் வடக்கு பகுதியில் சிங்கள இராணுவம் தொடர்ந்து தமிழர்கள் மீது அத்துமீறல்களில் ஈடுபட்டு மனித உரிமைகளை மீறி வருகிறது.

சிங்கள இராணுவத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர். அவர்களது குடும்பங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சொந்தங்களை இழந்து தமிழர்கள் தவிக்கிறார்கள்.

சிங்கள இராணுவத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை பலதடவை ஐ.நா. மனித உரிமை கண்காணிப்பு ஆவணப்படுத்தியுள்ளது.

இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.சபையில் இரண்டு தடவை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் சுதந்திரமான நன்பகத்தன்மையான விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த இரண்டு தீர்மானங்களையும் ஆதரித்து நமது நாடு வாக்களித்துள்ளது.

நமது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சார்பில் இலங்கையில் தமிழர்கள் உண்மையான அதிகாரம் பெறுவதற்கு வழிவகுக்கும் 13-வது சட்டத்திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

என்றாலும் இந்தியாவின் இந்த கோரிக்கையை இலங்கை அரசு இன்னும் ஏற்கவில்லை.

இதற்கிடையே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இலங்கை வடக்கு பகுதியில் உள்ள ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கு நிதி உதவிகளை செய்துள்ளது.

தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கவும், அத்தியாவசிய மருந்துகள் வாங்கவும் உதவிகள் செய்துள்ளன. என்றாலும், இந்திய அரசால் செய்யப்படும் இத்தகைய ஆக்கப்பூர்வமான உதவிகளை ஈழத்தமிழர்கள் பெறும் வகையில் இலங்கை அரசு சரியானபடி செய்யத் தவறிவிட்டது.

இந்தியாவில் உள்ள தொழில் கழகங்களில் உயரிய மதிப்பில் உள்ள இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் வேதனையையும், தமிழக மக்களின் மனவேதனையையும் அறிந்து இருக்க வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை பயணத்தை மேற்கொண்டால் அது அப்பாவி ஈழத்தமிழர்களின் விஷயத்தில் ஆழமான காயம் ஏற்படுத்துவதாக இருக்கும்.

எனவே, இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தற்போது இலங்கைக்கு எம்.பி.க்கள் குழுவை அனுப்பு வதை நிறுத்த வேண்டும்.

இதுதொடர்பாக நான், எம்.பி.க்களுக்கும் தனியே கடிதம் ஒன்றை எழுதியுள்ளேன்.

மேலும் இந்த இடத்தில் நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் கடிதத்தில் எழுதியுள்ள கருத்துக்கள் அனைத்தும் முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும்.

ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் இந்திய வணிக தொழில் கூட்டமைப்பின் கன்வீனர் ஜோதி மல்கோத்ரா இந்திய எம்.பி.க்கள் நடத்தும் பேச்சுவார்த்தை அரசியல் கூட்டுக்கு எடுக்கப்படும் முயற்சி என்று கூறியுள்ளார்.

இது தமிழக மக்களின் கோபத்துக்கும், கவலைக்கும் எதிரானது ஆகும்.  எனவே, ஈழத்தமிழர்கள் வேதனை மற்றும் தமிழர்களின் கோபத்தை உணர்ந்து உங்கள் பயணத்தை ரத்து செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

என்றாலும், இந்திய அரசால் செய்யப்படும் இத்தகைய ஆக்கப்பூர்வமான உதவிகளை ஈழத்தமிழர்கள் பெறும் வகையில் இலங்கை அரசு சரியானபடி செய்யத் தவறிவிட்டது.

இலங்கை அரசால் தொடர்ந்து நடைபெற்று வரும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தமிழக மக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளும், கோபத்துக்குள்ளும் ஆளாக்கி இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த கோபத்தை அதிகரிக்கச் செய்யும் வகையில் பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள படை கடத்திச் சென்று கைது செய்வது மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கும் மற்றும் தமிழக மீனவர்கள் கடத்தப்படுவதற்கும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினைக்காக தமிழக மாணவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மத்திய அரசும் இலங்கை யில் நடைபெறும் மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்த கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற இந்தியா கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வழக்கமான தொழில் பணியில் ஈடுபடாமல் இந்திய எம்.பி.க்களை இலங்கைக்கு அனுப்பி பேச்சு நடத்த வணிக தொழில் கூட்டமைப்பு முயல்வது தவறு என்பதை வலியுறுத்தி சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இலங்கையில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஒட்டுமொத்த நாடும் ஆதரிக்காததை இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு கவனத்தில் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தியாவில் உள்ள தொழில் கழகங்களில் உயரிய மதிப்பில் உள்ள இந்திய வணிக தொழில் கூட்டமைப்பு ஈழத்தமிழர்களின் வேதனையையும், தமிழக மக்களின் மனவேதனையையும் அறிந்து இருக்க வேண்டும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் இலங்கை பயணத்தை மேற்கொண்டால் அது அப்பாவி ஈழத்தமிழர்களின் விஷயத்தில் ஆழமான காயம் ஏற்படுத்துவதாக இருக்கும்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 29-11-2014, 02:04.02 AM ]
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தை தம்மால் மாத்திரமே ஒழிக்கமுடியும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ Saturday, 29-11-2014, 01:51.08 AM ]
இலங்கையின் மாகாணசபைகளின் அமர்வுகள் நடத்தப்பட்டால் அவை கலைக்கப்படலாம் என்ற அச்சத்தில் மாகாணசபைகளின் அமர்வுகளை அரசாங்கம் ஒத்திவைத்துள்ளதாக பொது எதிர்க்கட்சி கூட்டணி தெரிவித்துள்ளது.
[ Saturday, 29-11-2014, 01:21.53 AM ]
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் எதிர்வரும் திங்கட்கிழமையன்று இலங்கையில் உயர் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.
[ Saturday, 29-11-2014, 12:38.39 AM ]
ஜாகீர் உசேன் சென்னையில் கைது செய்யப்பட்ட இலங்கையரான பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
[ Saturday, 29-11-2014, 12:27.51 AM ]
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் கீழ் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
[ Friday, 28-11-2014 12:57:12 GMT ]
ஜப்பானில் எரிமலை ஒன்று வெடித்து சிதறியதில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 28-11-2014 13:47:53 GMT ]
காதலுக்கு வயதில்லை என்று நிரூபித்துள்ளனர் திருச்சியில் ஊனமுற்ற காதலர்கள்.
[ Friday, 28-11-2014 13:48:14 GMT ]
சீன் அப்போட் என்ற பந்துவீச்சாளரின் பவுன்சர் பந்தில் அடிபட்ட அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர் ஹியூக்ஸ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
[ Friday, 28-11-2014 12:53:40 GMT ]
மெனோபாசுஸுக்கு பிறகு கூட மாதவிடாயை வரவழைத்து, கருமுட்டையை தானம் பெற்று, குழந்தை உருவாகச் செய்கிற சிகிச்சைகள் பிரபலமாகி வருகின்றன.
[ Friday, 28-11-2014 06:36:56 GMT ]
யோலோ என்ற பாடலை இயக்கி, நடித்து, பாடலுக்கான வரிகளை எழுதி, பாடலை பாடியிருக்கிறார் ஸ்ரீநாத்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Thursday, 27-11-2014 12:23:40 ] []
தமிழனின் மனதினில் மாவீரர் தினம் என்றும் மாறாது தமிழ் இனத்தின் விடுதலை வீரர்களின் நினைவுகளை தடுக்க சிங்களம் நினைத்தால் அதற்கு எதிர் காலம் பதில் சொல்லும்.