செய்தி
ராகுல் காந்தியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு! பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் இருந்து மாற்ற கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 07 ஏப்ரல் 2013, 07:07.35 AM GMT ]
கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் வாசன் சந்தித்து பேசினார். அதன்போது, வாசன் ராகுல் காந்தியிடம், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

வாசனின் இந்த கருத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜீ.கே.வாசன் சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். அப்போதும் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்றுவது தொடர்பாக பேசியதாக கூறினார்.

இதையடுத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் வாசன் சந்தித்து பேசினார். இதனால் வாசன் தனிக்கட்சி தொடங்க தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

அவரது எம்.பி. பதவி காலம் விரைவில் முடிவடைவதால் அவர் தனிக்கட்சி முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் வாசன் சந்தித்து பேசினார். சுமார் 30 நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது தனிக்கட்சி தொடர்பாக எழுந்துள்ள வதந்திகள் பற்றி ராகுல் காந்தியிடம் வாசன் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிராக வீசும் அலை பற்றியும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

ராகுலுடன் நடந்த சந்திப்பு பற்றி வாசனிடம் கேட்டபோது அவர் கூறுகையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். அப்போது அவரது பல்வேறு சந்தேகங்களுக்கு நான் தெளிவான விளக்கம் அளித்தேன். நான் சொன்னவற்றை அவர் கனிவோடு கேட்டார் என்றார்.

அவர்களது பேச்சில் இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலைபாடுதான் முக்கிய அம்சமாக இருந்ததாக தெரிகிறது.

இலங்கை பிரச்சினையை முன்வைத்து தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எதிராக எழுந்துள்ள மிகப்பெரிய எழுச்சி பற்றியும் அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

வாசன் ராகுல்காந்தியிடம் பேசும்போது, இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நீக்கம் பற்றியும் அவர்கள் பேசியதாக தெரிகிறது.

இதற்கிடையே வெளிநாட்டுக்கு சென்றுள்ள சோனியா விரைவில் டெல்லி திரும்பியதும் அவரையும் சந்தித்து பேச வாசன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பிறகே வாசன் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான சர்ச்சைகளுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 31-10-2014, 05:01.22 PM ]
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்திக் கொண்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
[ Friday, 31-10-2014, 05:00.55 PM ]
வடக்கு மாகாண முதலமைச்சரின் 2014ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், குறைந்த வருமானத்தைக் கொண்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் இன்று  வழங்கப்பட்டன.
[ Friday, 31-10-2014, 04:14.16 PM ]
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று கொஸ்லாந்தை மண் சரிவுக்குட்பட்ட பிரதேசத்துக்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
[ Friday, 31-10-2014, 03:57.14 PM ]
அமைச்சர் ரெஜினோல்ட் குரே தன்னைத் தாக்கியதாக பாணந்துறை பிரதேச சபை தலைவரின் சாரதி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.
[ Friday, 31-10-2014, 03:02.15 PM ]
வடமாகாண மக்களுக்கு இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்கள் புதிய விடயங்கள் அல்ல என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-10-2014 12:34:42 GMT ]
யாஸிதி இனத்தை சேர்ந்த 19 வயது சிறுமி ஒருவர் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சந்தித்த கொடுமைகளை பற்றி அளித்த பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 31-10-2014 11:52:07 GMT ]
இந்தியாவில் முதன்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
[ Friday, 31-10-2014 10:56:04 GMT ]
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் அமைத்த களத்தடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
[ Friday, 31-10-2014 12:08:57 GMT ]
உடல் உறுப்புகளைப் போலவே இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.
[ Friday, 31-10-2014 02:07:49 GMT ]
அனுஷ்கா 30 வயது ஆகியும் திருமணம் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 31-10-2014 02:47:48 ]
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.