செய்தி
 PhotoVideo
கிளிநொச்சி உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல்!- பா.உ சரவணபவன், சி.சிறீதரன் நேரில் சென்று பார்வை
[ புதன்கிழமை, 03 ஏப்ரல் 2013, 06:11.52 AM GMT ]
கிளிநொச்சி உதயன் பணிமனை மீதும் பணியாளர்கள் மீதும் காட்டு மிராண்டிகளின் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மூன்று பேர் படுகாயம் உட்பட நான்குக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறீதரன் ஆகியோர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிசாரும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயப்பட்டுள்ளவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி அலுவலகம் மீது தாக்குதல் இடம் பெற்று ஐந்தாவது நாள் அதிகாலை ஏழு பேர் கொண்ட குழுவினரால் முகத்தை மூடிக்கட்டிக் கொண்டு அலுவலகத்துள் புகுந்து மோசமான முறையில் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன.

இத்தாக்குதல்களால் கிளிநொச்சி பகுதி மக்கள் மத்தியிலும் அச்சமும், பதட்டமும் நிலவுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தாக்குதல்கள் தொடருகின்ற போதிலும் தாக்குதலாளிகள் எவரும் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது தாக்குதலாளிகளுக்கு துணிவை ஏற்படுத்துவதாக அமைகின்றது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Monday, 22-12-2014, 01:54.54 PM ]

முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன புகையிலை நிறுவனத்திடம் பணத்தை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்து அனுப்பிய கடிதம் சம்பந்தமான அறிக்கை தன்னிடம் இருப்பதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

[ Monday, 22-12-2014, 01:38.38 PM ]
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் எனவும் இதனையடுத்து புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஜனவரி 13 ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014, 01:25.16 PM ]

கணக்கியல் தொடர்பான தேசிய உயர்நிலை டிப்ளோமா பாடத்திட்டத்தின் தரம் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர்.

[ Monday, 22-12-2014, 12:42.19 PM ]
வணக்கம் தமிழா!
வானிறங்கி முற்றத்தில் ஆடும்
சிலிர்ப்பு நாட்டியத்தில்
சிலிர்த்துக்கிடக்கும் தேசத்தை உற்றுப்பார்!
[ Monday, 22-12-2014, 12:29.09 PM ]
ஜனவரி 9 ஆம் திகதி தான் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள போவதாக ஊவா மாகாண எதிர்க்கட்சித் தலைவர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
[ Monday, 22-12-2014 13:49:05 GMT ]
பிணத்திலிருந்து எபோலா பரவுவதால், இறுதிச்சடங்கை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு சியாரா லியோன் வலியுறுத்தியுள்ளது.
[ Monday, 22-12-2014 06:54:51 GMT ]
அன்பார்ந்த ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு நடக்கவிருப்பது இதோ,
[ Monday, 22-12-2014 06:57:55 GMT ]
அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் தங்கிக் கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
[ Monday, 22-12-2014 11:27:33 GMT ]
தற்போது உள்ள வாழ்க்கை முறையில் அனைவரையும் சர்க்கரை நோய் எளிதாக தாக்கிவிடுகிறது.
[ Monday, 22-12-2014 01:27:16 GMT ]
தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி+தயாரிப்பாளர் விரும்பும் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அவர்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.