செய்தி
தமிழகத்தில் தரையிறக்கப்படும் சிங்கள உளவாளிகள்!
[ செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2013, 11:42.47 PM GMT ]
தமிழக மக்களது தமிழீழம் சார்ந்த உணர்வினையும், எழுச்சியினையும் முறியடிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட பல தமிழ் உளவாளிகளை இராமேஸ்வரம் ஊடாக தமிழகத்தில் தரையிறக்கி வருகின்றது.

தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

அவர்கள் மீது இனப் படுகொலை புரிந்த சிங்கள ஆட்சியாளர்கள் அனைத்துலக விசாரணைக் குழுவால் விசாரிக்கப்பட்டு, போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.

தமிழீழ மக்களுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதற்கான வழிமுறைகள் குறித்து அவர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடாத்த வேண்டும்

என்ற முதன்மைக் கோரிக்கைகளுடன் தொடரும் தமிழக மாணவாகளது போராட்டம் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களை மட்டுமல்ல, சிங்கள ஆட்சியாளர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மாணவர்களது உறுதியான, அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்கள் தமிழக மக்கள் மத்தியில் தமிழீழம் குறித்த விழிப்புணர்ச்சியினை உச்ச நிலைக்கு உயர்த்தியுள்ளது.

தமிழக மாணவர்களது போராட்டத்திற்கு ஆதரவாக, பல்வேறு தளங்களிலும் போராட்டங்கள் பெருகி வருகின்றன.

தமிழகத்தின் குக் கிராமங்களுக்கும் இந்தப் போராட்டம் விரிந்து செல்கின்றது.

இன்று, திரைப்பட நடிகர் - நடிகைகளையும் இந்தப் போராட்டம் களத்தில் இறக்கியுள்ளது.

தமிழினப் படுகொலையின் பங்காளிகளான காங்கிரஸ் கட்சி பலத்த நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த ஒன்பது வருடங்களாக காங்கிரஸ் ஆட்சியின் அத்தனை கொடூரங்களுக்கும் உறுதுணையாக உடன் இருந்த தி.மு.க.வும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.

தமிழீழம் விடுதலை பெறாதுவிடின் தமிழகம் அமைதி கொள்ளாது என்பது நிச்சயமான நிலையில், இந்திய - சிங்கள ஆட்சியாளர்கள் அதனை முறியடிப்பதற்கான அத்தனை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்கள்.

தமிழக மக்களது தமிழீழம் சார்ந்த உணர்வினையும், எழுச்சியினையும் முறியடிப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட பல தமிழ் உளவாளிகளை இராமேஸ்வரம் ஊடாக தமிழகத்தில் தரையிறக்கி வருகின்றது.

தமிழகத்தில், கடந்த சில நாட்களாக இந்த இளைஞர்கள் அகதி என்ற போர்வையில் தமிழ் நாட்டினை வந்தடைந்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் கிழக்கு மாகாண வட்டாரத் தமிழ் பேசுவதையும் இவர்கள் வழங்கிய தொலைக்காட்சி நேர்காணலில் நன்றாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.

தமிழக மக்களது போராட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்கு பாதகமான பல விளைவுகளை ஏற்படுத்தி வருவதாக இவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும், இவர்கள் சிங்கள இராணுவ உளவுப் பிரிவால் ஏதோ தீய நோக்கத்திற்காகவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள் என்றே நம்பப்படுகின்றது.

மிகப் பெரிய திட்டமிடலுடன் சிங்கள அரசால் தமிழகத்தில் களம் இறக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் குறித்து தமிழக மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சிங்கள அரசின் இந்தச் சதி முயற்சிக்கு இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்களும் உடந்தையாக இருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் தமிழ் மக்களைக் குழப்பும் வகையிலான வன்முறைச் சம்பவங்கள் இவர்களால் தோற்றுவிக்கப்படலாம்.

அல்லது, அமைதியான மாணவர் போராட்டங்களில் குழப்பங்களையும் வன்முறைகளையும் தோற்றுவிக்க முயலலாம்.

அதனைச் சாட்டாக வைத்து, மாணவர் போராட்டங்களைத் தடை செய்வதற்கு முயற்சி செய்யலாம்.

இது வெறும் ஊகங்களின் அடிப்படையிலான சந்தேகங்கள் அல்ல. தமிழ் மக்களை அடக்குவதற்கு சிங்கள - இந்திய ஆட்சியாளர்கள் எதையும் செய்வார்கள் என்பதை நாம் கடந்து வந்த பாதை நன்றாகவே கற்றுத் தந்துள்ளது.

தேசியத் தலைவர் அவர்களது காலடியிலேயே கருணா என்ற கருநாகத்தை உருவாக்கிய சிங்கள ஆட்சியாளர்கள் தமிழகத்தில் நடைபெறும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பார்வையாளராக நின்று ரசிக்கப் போவதில்லை.

புலம்பெயர் தமிழர்களது மீள் எழுச்சியை நிர்மூலம் ஆக்கும் சிங்கள முயற்சியில் பிரான்சின் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் பரிதி சுட்டுக் கொல்லப்பட்டதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை இனப் படுகொலை செய்து பெற்ற வெற்றி கைநழுவிப் போவதற்கு சிங்கள தேசம் அவ்வளவு இலகுவில் விட்டுவிடாது.

சிங்களத்தின் அத்தனை கொடூரங்களுக்கும் பக்கத் துணையாக இருந்து வரும் காங்கிரஸ் ஆட்சியாளர்களும் உச்சத்தைத் தொட்டுவரும் தமிழக மாணவர்கள் போராட்டத்தைத் தொடர அனுமதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

நட்பு நாடு என்ற ஒரே தகமைக்காக 600 தமிழக மீனவர்களைப் பலி கொள்ளவும், ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்கள் வதை படவும் அனுமதிக்கும் இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள், தமிழகத்தின் உள்ளேயும் சிங்களக் கொடூரங்களை அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்ப முடியாது.

ஏனென்றால், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தமிழக மக்களால் புதைகுழி வெட்டப்படுகின்றது என்பதை அவர்கள் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார்கள்.

- இசைப்பிரியா

தொடர்புபட்ட செய்தி:  மீண்டும் இலங்கையில் இருந்து அகதிகள் வருகை!- இராமேஸ்வரத்தில் விசாரணை

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 23-11-2014, 05:15.33 AM ]
இலங்­கையில் இந்­துக்கள் கடு­மை­யான நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­வ­தாக புது­டில்­லியில் நடை­பெறும் அனைத்­து­லக இந்து மாநாட்டில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் தெரிவித்துள்ளார்.
[ Sunday, 23-11-2014, 05:14.57 AM ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தொடர்ந்தும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Sunday, 23-11-2014, 05:04.11 AM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சற்று முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
[ Sunday, 23-11-2014, 04:28.59 AM ]
ஒரு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் வலதுகரமாக அறியப்பட்டவரும், மகநெகுமவின் சூத்திரதாரியுமான பொறியாளர் அம்ஜத் கட்சி தாவியுள்ளார்.
[ Sunday, 23-11-2014, 03:40.50 AM ]
இந்தியப பெருங்கடல் பிராந்தியத்தில் தனது விநியோகப் பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக தி நமீபியன் என்ற நமீபிய நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தி கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
[ Sunday, 23-11-2014 04:40:48 GMT ]
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹோப்இன்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் விலங்குகளின் பிறப்பிடம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
[ Saturday, 22-11-2014 13:41:22 GMT ]
அரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் தினமும் பாலில் குளிப்பதாக தெரியவந்துள்ளது.
[ Sunday, 23-11-2014 03:52:44 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பணயம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
[ Sunday, 23-11-2014 03:16:54 GMT ]
இத்தாலியைச் சேர்ந்த தொழில்நுட்ப வடிவமைப்பாளர் ஒருவர் 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பயோனிக் கை ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
[ Saturday, 22-11-2014 23:35:26 GMT ]
காதலி மணமகளாக விற்க்கப்படுகிறாள் என்ற இப்பாடலின் கதை எழுதி இயக்குகிறார் நெடுந்தீவு முகிலன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 23-11-2014 03:40:50 ]
இந்தியப பெருங்கடல் பிராந்தியத்தில் தனது விநியோகப் பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக தி நமீபியன் என்ற நமீபிய நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தி கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.