செய்தி
அமெரிக்காவின் வீண் தலையீட்டை அனுமதிக்க முடியாது!- சீறுகிறார் இலங்கை ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013, 04:40.02 AM GMT ]
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றுக் காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஜனாதிபதி. சில தரப்புகளின் தேவையற்ற தலையீடுகளும், அழுத்தங்களும் நாட்டுக்கு எதிராகச் சதிசெய்யும் ஒரு தரப்பு இருப்பதையே கோடி காட்டுவதாகவும், அமைச்சர்கள் இது தொடர்பில் மிகவும் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா அண்மைக் காலமாக மேற்கொண்டு வரும் தலையீடுகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விலாவாரியாக எடுத்துக் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அண்மையில் மின்கட்டண அதிகரிப்பு விடயத்திலும் அமெரிக்கா தலையிட முயற்சிகளை எடுத்ததாகவும், இவ்வாறானவற்றை அனுமதிக்க முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சுயாதிபத்திய இறைமையுள்ள ஒரு நாடு. அதன் உள்நாட்டு விவகாரங்களில் தேவையற்ற தலையீடுகளைச் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு நாம் அனுமதியளிக்கப் போவதில்லை.

எமது நாட்டின் மீது மேற்குலக நாடுகள் தலையீடுகளைச் செய்வது சாதாரண விடயமல்ல. நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குத் தள்ளும் ஒரு சதி நடக்கிறதா என்றே நாம் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே, அமைச்சர்மார் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்'' என்ற சாரப்பட ஜனாதிபதி கருத்துகளை முன்வைத்தார் என அரச உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 01-11-2014, 10:56.56 AM ]

தேனும், பாலும் தடவி, நாட்டின் சகலதுறை மக்களுக்கும் மீட்சியை கொடுக்கும் ஒரு வரவு செலவுத் திட்டமாக காட்ட முனையும் ஜனாதிபதி, முன்மொழிவுகளுக்கான பணத்தை எங்கிருந்து எடுக்கப் போகிறார் என்பதை கூறவில்லையென  பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்  தெரிவித்துள்ளார்.

[ Saturday, 01-11-2014, 10:17.12 AM ]
கடந்த புதன்கிழமை காலை தியத்தலாவைக்கு அருகில் அமைந்துள்ள கொஸ்லாந்த, மீரியபெத்த பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு நூற்றுக்கணக்கான லயன் அறைகளை புதைத்தது.
[ Saturday, 01-11-2014, 10:06.36 AM ]
பதுளையில் நடந்த மண்சரிவு இடரில் பெற்றோரை இழந்து அநாதரவான நிலையில் தவிக்கும் 75 சிறுவர்களை வடமாகாண சபை பொறுப்பேற்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளது.
[ Saturday, 01-11-2014, 09:45.11 AM ]
2006ம் ஆண்டு மாவிலாற்றில் போர் தொடங்கியதை நாமறிவோம். இதன் விளைவாக சம்பூர் பகுதி மக்கள் மட்டக்களப்பு நோக்கி துரத்தப்பட்டனர்.
[ Saturday, 01-11-2014, 08:45.15 AM ]
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
[ Saturday, 01-11-2014 10:46:10 GMT ]
அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் தங்களது மகனிடம் எபோலா இருப்பதாக கூறியவுடன், கதறி அழும் சம்பவம் மனதை உருக்குகிறது.
[ Saturday, 01-11-2014 06:43:07 GMT ]
தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு தண்டனை விதித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 01-11-2014 06:41:04 GMT ]
இந்திய அணித்தலைவர் டோனி எப்போதும் சிறந்த அணித்தலைவராகவே இருக்கிறார் என்று அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
[ Saturday, 01-11-2014 07:00:15 GMT ]
பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள இன்றைய தலைமுறையினர், சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகின்றனர்.
[ Saturday, 01-11-2014 02:05:50 GMT ]
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 01-11-2014 10:17:12 ] []
கடந்த புதன்கிழமை காலை தியத்தலாவைக்கு அருகில் அமைந்துள்ள கொஸ்லாந்த, மீரியபெத்த பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு நூற்றுக்கணக்கான லயன் அறைகளை புதைத்தது.