செய்தி
(2ம் இணைப்பு)
Photo
இறுதிப் போரின் போது பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளவில்லை! இராணுவம் அறிக்கை
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 02:40.45 PM GMT ]
மனிதாபிமான நடவடிக்கைகளின் போது, இலங்கை இராணுவத்தினர் பொது மக்களை இலக்கு வைத்து எந்தவித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவத தளபதி ஜகத் ஜயசூரியவினால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று காலை கையளிக்கப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், கூறப்பட்டுள்ள ஷெல் தாக்குதல் சம்பவங்கள் இலங்கை இராணுவத்தால் உண்டாகவில்லை. கட்டளை அதிகாரியின் ஆலோசனைக்கு அமைய பாதுகாப்பு தரப்பினர் பொது மக்களை பாதுகாத்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு உண்டான பாதகங்கள் தமிழீழ விடுதலை புலிகளின் சட்ட விரோத செயற்பாடுகளால் உண்டாகியிருக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில்  இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு பாதுகாப்புக்காக ஓடி வந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை, போதிய பயிற்சி இல்லாத தமிழீழ விடுதலை புலிகள் ஏவிய பீரங்கி குண்டுகள் பொதுமக்கள் குவிந்திருந்த இடங்களில் விழுந்தமை, சிறுவர் முதியோர் உட்பட பொதுமக்களை கட்டாயப்படுத்தி அவர்களை யுத்த நடவடிக்கையில் இணைத்தமை உட்பட இந்த செயற்பாடுகள் காணப்பட்டன' என்றும் இராணுவம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சமூகம் தமிழீழ விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களை நிறுத்த வேண்டிய தமது கடமையில் தவறிட்டதாகவும் இலங்கை இராணுவம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2ம் இணைப்பு

போரில் நடந்த பொதுமக்கள் உயிரிழப்புக்கு விடுதலைப்புலிகளே பொறுப்பு--இலங்கை இராணுவ நீதிமன்றம்

இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் பொதுமக்கள் படுகொலைகள் குறித்து, இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளின் படி இராணுவம் நியமித்த இராணுவ நீதிமன்றம், இக்குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து இராணுவத்துக்கு இந்தக் கொலைகளில் எந்தப் பொறுப்பும் இல்லை என்று கூறும் ஒரு அறிக்கையை பாதுகாப்புச் செயலரிடம் சமர்ப்பித்திருக்கிறது. இராணுவ நீதிமன்றம் இந்த அறிக்கையில் விடுதலைப்புலிகள் மீதே இந்த பொதுமக்கள் உயிரிழப்புக்குப் பழிபோட்டிருக்கிறது.

இது குறித்து தமிழோசையிடம் கருத்து தெரிவித்த இலங்கை இராணுவத்துக்காகப் பேசவல்ல அதிகாரி பிரிகேடியர் ருவான் வணிகசூரிய “விடுதலைப்புலிகள்தான் பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள். அது மட்டுமல்ல சிவிலியன் மக்கள் கூட்ட்த்தின் மத்தியிலிருந்து குண்டுத்தாக்குதல்களை அவர்கள் தான் நடத்தினார்கள். இந்தக் குற்றத்துக்கு முழுப்பொறுப்பும் அவர்கள்தாம் ஏற்கவேண்டும். இதை அவர்கள் செய்யாமல் இருந்தால் போரில் ஏற்பட்ட எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதம் நடந்திருக்காது. துரதிருஷ்டவசமாக ஏற்பட்ட இந்த எதேச்சையான பொதுமக்கள் உயிர்ச்சேதத்துக்கு விடுதலைப்புலிகள்தான் பொறுப்பு.” என்றார்.

எனவே எதேச்சையான இந்த பொதுமக்கள் உயிர்ச்சேதம் என்று நீங்கள் சொல்லும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா. என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் “இந்த எதேச்சையான உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது என்பது யதார்த்தமானதுதான். இந்த விஷயம் போரின் இறுதிக்கட்டத்தில் சில காரணங்களால் வெளிவராத ஐ.நா மன்ற அறிக்கையில்கூட இதில் சுமார் 7700 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்லலாம். இதில் விடுதலைப்புலிகளும் உள்ளடங்கியிருக்கலாம். இதில் கொல்லப்பட்ட சிவிலியன்கள் இந்த எதேச்சையாக கொல்லப்பட்டவர்களில் சிலராக இருக்கலாம். இவர்கள் விடுதலைப்புலிகளின் பாதுகாப்புக்காக அவர்களால் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தப்பட்டவர்களாகவும் இருக்கலாம் என்றார்.

போர்க்காலத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் என்று ஐ.நா மன்ற வல்லுநர்கள் குழு அளித்த அறிக்கை கூறியது. எனவே இது குறித்து இராணுவமே தன்னைத்தானே விசாரித்து தன்னையே நிரபராதி என்று கூறிக்கொள்வதைவிட ஒரு சர்வதேச விசாரணை மேலும் பொருத்தமானதாகப் படவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர் “இந்த இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்த பிரச்சனை விசாரிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியும் இதற்காகவே வடக்கில் தமிழ் அதிகாரிகளைக் கொண்டு ஒரு மக்கள் தொகை கணக்கீடு நடத்தப்பட்டது. அவர்கள் தந்த அறிக்கையும் இறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 7400 இருக்கும் என்றே கூறியது என்றார்.

மேலும்இஅவர் கூறுகையில் இதில் பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டார்கள். இந்த நாடுகள் தங்கள் நாடுகளுக்கு எத்தனை பேர் வந்திருக்கிறார்கள் என்பதை தருவதில் போதிய ஒத்துழைப்புக் காட்டவில்லை என்றார்.

மேலும் இராணுவ விசாரணை சர்வதேச விசாரணை என்றெல்லாம் கூறும் போது இலங்கை ராணுவ சட்டமும் பிரிட்டிஷ் இராணுவ சட்டத்திலிருந்து வந்ததுதான் என்பதை மறந்துவிடக்கூடாது. 1949ல் இராணுவம் உருவாக்கப்பட்ட போது இந்த சட்டம் உருவானது. பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்படும் இதே நடைமுறைதான் இங்கும் பின்பற்றப்பட்டது என்றார் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

 


 

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 27-11-2014, 06:07.41 AM ]
யாழ். வல்வெட்டித்துறை, நெடியகாடு பிள்ளையார் ஆலயத்தில் படையினரின் அச்சுறுத்தலையும் மீறி சதுர்த்திப் பூசை நடைபெற்றது. இன்று பூசை ஏற்பாடாகியிருந்த சமயம் ஆலயத்துக்குவந்த இராணுவத்தினர் பூசை வழிபாடுகள் நடத்தக்கூடாது இது மேலிடத்து உத்தரவு என்று மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
[ Thursday, 27-11-2014, 05:44.22 AM ]

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளதுடன் இதுவரை 12 கோர விபத்துக்கள் அந்த வீதியில் நடந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

[ Thursday, 27-11-2014, 05:30.12 AM ]
கிழக்கு மாகானத்தில் ஒரு வார காலத்துக்கும் மேலாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக ஓட்டமாவடி பிரதேசத்தில் சீரற்ற வடிகான்களை அண்டிய வீதிகளில் மழை நீர் அதிகம் தேங்கி நிற்பதனால் பொது மக்கள் பெருமளவில் அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
[ Thursday, 27-11-2014, 05:12.34 AM ]

கனடாவில் ஸ்காபரோ நகரில் நேற்று தமிழீழத் தேசியத் தலைவரின் 60வது அகவைக் கொண்டாட்டம் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 

[ Thursday, 27-11-2014, 03:49.42 AM ]
தனது புல­னாய்வு பிரி­வினர் சிறந்­த­வர்கள் என மார்தட்டும் மஹிந்தவிற்கு பொது வேட்­பாளர் யார் என்­பதை கண்­டு­பி­டிக்க முடி­யாமல் போய்­விட்­டது. தனது போட்­டி­யா­ளரை தன்­னு­ட­னேயே வைத்­திருந்துள்ளார் என குறிப்­பிட்ட ராஜித சேனா­ரத்ன, அர­சாங்­கத்தின் மொத்த பற்­க­ளையும் ஒன்­றொன்­றாக கழற்றி எடுப்போம். மஹிந்­தவின் தூக்­கத்தை கெடுப்போம் எனவும் தெரிவித்தார்.
[ Thursday, 27-11-2014 06:05:45 GMT ]
ஆண்மையை அதிகரிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், பாம்பு ஒயின் குடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Wednesday, 26-11-2014 12:22:41 GMT ]
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் உள்ளது என்றால், 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 27-11-2014 05:24:07 GMT ]
நியூ சவுத்வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தலையில் அடிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவுஸ்திரேலிய விரர் பிலிப் ஹியூக்ஸ் இன்று பரிதாபமாக உயிரிழந்தார்.
[ Thursday, 27-11-2014 00:25:05 GMT ]
Blinkbox எனும் ஒன்லைன் வீடியோ (Streaming) சேவையினை வழங்கிவரும் Tesco நிறுவனம் தற்போது புதிய வசதி ஒன்றினை பயனர்களுக்கு வழங்க முன்வந்துள்ளது.
[ Wednesday, 26-11-2014 23:12:18 GMT ]
அமிலியன், செல்வா ஆகியோரின் தயாரிப்பில் ரோஷன் அவர்கள் இயக்கி இருக்கும் குறும்படம் சந்தர்ப்பம்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 26-11-2014 00:43:03 ]
கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ' அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்' என்று..,