செய்தி
30 ஆண்டுகள் இலங்கையில் நடந்த போருக்கு இந்தியாதான் காரணம்! கோத்தபாய ராஜபக்ச
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 11:30.46 AM GMT ]

தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியா தான் காரணம் என இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளிக்கையிலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் உச்சகட்ட போர் நடைபெற்ற வேளையில், கடைசி 100 நாட்களில் நடைபெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளின் கீழ் ஐ.நா. மன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. சபைக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர உறுப்பினர் ஹர்தீப் சிங் பூரி சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த இலங்கை ஜனாதிபதி மகிந்த  ராஜபக்ச, இலங்கையில் நிகழ்ந்த தீவிரவாதம் குறித்து குரல் எழுப்பாதவர்கள், போர் கால அத்துமீறல்கள் குறித்து விசாரணை கோருவது வேடிக்கையாக உள்ளது என கூறியிருந்தார்.

இந்நிலையில், தனிஈழம் கோரிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெற்ற யுத்தத்திற்கு இந்தியாதான் காரணம் என இலங்கை இப்போது குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை ஊடகத்திற்கு பேட்டியளித்த பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கையில் தீவிரவாதத்தை உருவாக்கிய பொறுப்பில் இருந்து இந்தியா எப்போதுமே விலகிவிட முடியாது.

இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையீடு செய்த 1988ம் ஆண்டின் போது இந்தியாவால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை தீவிரவாதிகள், மாலைதீவின் மீது தாக்குதல் நடத்தியதையும், இச் சம்பவத்தின் பிறகு இலங்கை அரசு சந்தித்த நெருக்கடிகளையும் இந்தியா உணர வேண்டும்' என்று மேலும்  கூறியுள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 30-10-2014, 05:02.16 PM ]
பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த பிரிவில் உள்ள ஹல்துமுல்ல- மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் பல உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உண்டாகியுள்ளமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 30-10-2014, 04:43.00 PM ]
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மண்சரிவினால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை பகுதிக்கு இன்று மாலை நேரில் விஜயம் செய்துள்ளார்.
[ Thursday, 30-10-2014, 04:42.45 PM ]
இலங்கையில் போருக்கு பின்னர் பல முன்னேற்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனினும் பல விடயங்களில் இலங்கை முன்னேற்றம் காணவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
[ Thursday, 30-10-2014, 04:29.37 PM ]
ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் இன்று வழங்கிய மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக அந்த நாட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.
[ Thursday, 30-10-2014, 04:26.38 PM ]
இலங்கையின் 29 வயது பணியாளர் ஒருவர் தமது அறை நண்பரை கடித்தமையால் அவர் விரல் ஆறு வீத அங்கவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 30-10-2014 12:04:47 GMT ]
சிரியாவில் முப்பது பேரை கொடூரமாக சுட்டுக் கொன்ற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறிச்செயல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
[ Thursday, 30-10-2014 11:14:40 GMT ]
தமிழகத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட எட்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
[ Thursday, 30-10-2014 12:10:57 GMT ]
உலகக்கிண்ண போட்டியில் யூனுஸ்கானும், மிஸ்பாவும் இடம்பெறக் கூடாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் யூசுப் கூறியுள்ளார்.
[ Thursday, 30-10-2014 15:46:48 GMT ]
குளிர்சாதன பெட்டி நம் வாழ்க்கையை சுலபமாக்கி விட்டது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.
[ Thursday, 30-10-2014 03:06:42 GMT ]
தமிழ் சினிமாவே எதிர்பார்த்து கொண்டிருக்கும் கூட்டணி அஜித்-முருகதாஸ் தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 30-10-2014 02:46:07 ] []
இலங்கை வரலாற்றில் மலையக மக்கள் ஒரு பாரிய சக்தி என்றே சொல்ல வேண்டும்.