செய்தி
லோஹினி ரதிமோகனை இலங்கைக்கு அனுப்பக் கூடாது!- ஆர்.எஸ்.எப் அமைப்பு
[ புதன்கிழமை, 10 ஏப்ரல் 2013, 11:03.33 AM GMT ] [ பி.பி.சி ]
ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்து பெற்றிருக்கின்ற நிலையிலும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் செய்தியாளரான லோஹினி ரதிமோகன் அவர்கள் குறித்து எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பான ஆர்.எஸ்.எப் கவலை வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 11ம் திகதி ஐக்கிய அரபு இராட்சியத்தால், இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ள 19 பேரில் இவரும் அடங்குகிறார்.

இலங்கையில் அண்மைய நிகழ்வுகள் மற்றும் அங்கு தமிழ் செய்தி ஊடகங்கள் எதிர்நோக்கும் மோசமான சூழ்நிலை ஆகியவற்றுக்கு மத்தியில் லோஹினி ரதிமோகனை அங்கு திருப்ப அனுப்பக் கூடாது என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

இலங்கையில் ஜனநாயகத்துக்கான செய்தியாளர் அமைப்பும் ஆர் எஸ் எப் உடன் சேர்ந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை தடுப்பதற்கு ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவை கோரியுள்ளன.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 26-11-2014, 08:26.48 PM ]
நவம்பர் 27 ஈழத் தமிழர்கள் தங்களின் இறந்த உறவுகளை நினைவுகூரும் தினமென  தெற்கு அவுஸ்திரேலிய வேல்ஸ் அதிகார சபையின் செனட்டர்  லீ ரியானன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
[ Wednesday, 26-11-2014, 05:24.58 PM ]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் (முஸ்லிம்) காங்கிரஸ் எதிர்வரும் சனிக்கிழமையன்று தீர்மானிக்கவுள்ளது.

[ Wednesday, 26-11-2014, 04:57.35 PM ]

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் யானைப் பிரச்சினை உட்பட வீடு, குடிநீர் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று கோரியும் இப்பிரதேசங்களின் பெண்கள் எதிர்ப்பு பேரணியொன்றை இன்று நடத்தினர்.

[ Wednesday, 26-11-2014, 04:50.39 PM ]
தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான நெருக்குவாரங்கள் மத்தியில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டின் பாடசாலைகள் சிலவற்றில் மாவீரர் தின பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது.
[ Wednesday, 26-11-2014, 04:21.43 PM ]

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவு அகற்றல் தொடர்பில் மீண்டும் நல்லூர் பிரதேச சபை சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில், 2.5மில்லியன் ரூபா
செலவில் நாவற்குழி பகுதியில் கழிவு அகற்றலுக்காக போடப்பட்ட வீதியும் வெள்ளம் கொண்டுபோகும் நிலையில் காணப்படுகின்றது.

[ Wednesday, 26-11-2014 07:36:39 GMT ]
வங்கதேசத்தின் அமைச்சர் ஒருவர் ஹஜ் யாத்திரையை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 26-11-2014 12:22:41 GMT ]
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் உள்ளது என்றால், 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 26-11-2014 10:15:27 GMT ]
அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், ஷெட்பீல்டு ஷில்டு முதல் தர போட்டியில் விளையாடிய போது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.
[ Wednesday, 26-11-2014 13:10:40 GMT ]
நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து.
[ Wednesday, 26-11-2014 08:06:16 GMT ]
மண்ணில் அனைவரும் பிறக்கின்றனர் பின் இறக்கின்றனர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 26-11-2014 00:43:03 ]
கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ' அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்' என்று..,