செய்தி
 Photo
நோர்வே தமிழர்களுடன் தமிழீழ உணர்வாளர் நடிகர் மணிவண்ணன்!
[ ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013, 03:55.01 PM GMT ]
பல ஆண்டுகளாக தமிழின விடுதலைக்காக போராடி வருகின்ற தமிழ் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தமிழ் உணர்வாளர் மதிப்புக்குரிய திரு மணிவண்ணன் அவர்களுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் அன்னை பூபதி தமிழ்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் நோர்வே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

தன்னுடைய துறைசார்ந்து சில வியாபார நிறுவனங்களின் அழைப்பில் வந்திருந்த போது தமிழர் ஒருங்கிணைப்பு குழுவையும் தமிழீழ மக்களையும் பார்ப்பதே தன்னுடைய முதற்பணியாக கொண்டதால் மக்களை சந்திப்பதர்க்கான ஏற்பாடுகளை மிக குறுகிய நேரத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட திரு மணிவண்ணன் அவர்கள் தமிழீழ விடுதலைக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்ததோடு அவரின் சில கருத்துக்கள் ஆழ்மனதில் ஈரத்தையும் ஏற்படுத்தியது.

குறிப்பாக தன்னுடை பெற்றோர்களின் மரணத்தில் அழாமல் மனதை திடமாக வைத்திருந்ததாகவும் ஆனால் தன்னோடு பாசமாக பழகிய தம்பி தங்கைள் முள்ளிவாய்க்காலில் புதைத்த இடமே தெரியாமல் போன போது தான் மனம் இடிந்து பல மாதங்களாக அழுததாகவும் கூறி அவருடைய குரல் தளர்ந்து போனதையும் பார்க்க முடிந்தது.

இதேவேளை தான் தமிழீழத்தில் பிறந்திருந்தால் ஒரு போராளியாக பிறந்து சிறீலங்காவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி மாவீரனாக புதைக்கப்பட்டிருப்பேன் என்பதையும் உறுதியோடு கூறியிருந்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 18-12-2014, 09:22.24 AM ]
தமிழ் மக்கள் தங்களின் அரசியல் தீர்வு குறித்தான விருப்பினை வெளிப்படுத்துவதற்கு பொதுசன வாக்கெடுப்பொன்றினை நடத்துமாறு இலங்கையில் எவரும் கோரவில்லை என சிறிலங்காவின் எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கக தெரிவித்துள்ளார்.
[ Thursday, 18-12-2014, 09:00.25 AM ]
நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மாயானம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மறைத்து வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எதிரணி அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
[ Thursday, 18-12-2014, 08:42.02 AM ]
எதிர்வரும் ஜனவரி 8ம் திகதியுடன் கட்டாயம் சேவையில் இருந்து ஓய்வுபெற வேண்டிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவுக்கு மீண்டும் 6 மாத சேவை நீடிப்பை வழங்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பரிந்துரைத்துள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
[ Thursday, 18-12-2014, 08:32.37 AM ]

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 50 வீத வாக்குகளை பெற முடியாத நிலைமை ஏற்பட்டால், இரண்டாவது விருப்பு வாக்கை எண்ணுவதற்கு முன்னர் மக்களுடன் வீதியில் இறங்கி போராட எதிர்க்கட்சிகள் தயாராக இருப்பது பற்றி தகவல்கள் கிடைத்துள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

[ Thursday, 18-12-2014, 08:03.25 AM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் அவரது புதல்வரான விதுர விக்கிரமநாயக்கவும் பொது எதிரணிக்கு ஆதரவு தெரிவித்து அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
[ Thursday, 18-12-2014 09:09:28 GMT ]
பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளி தாக்குதலுக்கு ஆப்கான் தலிபான்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
[ Thursday, 18-12-2014 07:37:11 GMT ]
டெல்லியில் நடந்த முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது மடியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததாக நடிகை குஷ்பு பேசியுள்ளார்.
[ Thursday, 18-12-2014 05:54:55 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 408 ஓட்டங்கள் குவித்துள்ளது.
[ Thursday, 18-12-2014 07:35:54 GMT ]
காய்கறிகள் நமது அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.
[ Wednesday, 17-12-2014 23:12:12 GMT ]
மழலையின் மனம் என்ற பாடலை இயக்கி, வரிகளை எழுதி வருகிறார் குருநீலன்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 17-12-2014 05:22:38 ]
கடந்த வாரம் நாம் எழுதிய கட்டுரையில் நாம் ஒன்றை தெளிவாக குறிப்பிட்டிருந்தோம். ஜனநாயக முறையில் வாக்கு பலத்தை நாம் கட்டாயம் பிரயோசனப்படுத்த வேண்டும் என்று.