செய்தி
 Video
“எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கு”! திருப்பதியில் மகிந்த ராஜபக்ச பெருமிதம்
[ சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2013, 07:35.31 AM GMT ]

தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

திருப்பதியில் சுவாமி தரிசனம் முடித்து விட்டு, செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்துள்ளேன். ஏழுமலையானை தரிசனம் செய்தது எனக்கு மனநிம்மதி அளிக்கிறது. எனக்கு எல்லா நாட்டிலும் எதிர்ப்பு உள்ளது. இதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று இந்தியாவிற்கு சென்றிருந்தார். ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, பீகாரில் நேற்று கடும் போராட்டங்கள் நடைபெற்றன.

இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பீகார் சென்ற ஜனாதிபதி புத்தகயாவில் வழிபாடு நடத்தினார். பின்னர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு நேற்று மாலை சென்றடைந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலையை சென்றடைந்தார். வழியெங்கும் அவருக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

திருமலையில் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருந்தார். பின்னர் அதிகாலை 3 மணிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது குழுவினரும் திருப்பதியில் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

சுமார் ஒரு மணிநேரம் கோயிலில் தரிசனம் செய்தார். இதனைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு கார் மூலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து கொழும்புக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 01-11-2014, 12:32.43 PM ]
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி மன்னாரில் காணி அபகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
[ Saturday, 01-11-2014, 12:26.06 PM ]
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தா முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
[ Saturday, 01-11-2014, 12:21.10 PM ]
பிரிட்டனுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கிறிஸ் நோனிஸ் விரைவில் ஜனாதிபதி ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.
[ Saturday, 01-11-2014, 12:10.36 PM ]
இலங்கையில் தமிழக மீனவர்கள் ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்ய இந்திய அரசு துரிதமாக செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
[ Saturday, 01-11-2014, 11:40.16 AM ]
கொத்மலை, டன்சினன் தொழிற்சாலைக்கு உட்பட்ட பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதை தொடர்ந்து 92 குடும்பத்தினர் இடம்பெயர்ந்து தேயிலை தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
[ Saturday, 01-11-2014 12:41:26 GMT ]
காங்கோ நாட்டில் சந்தேகத்துக்கு உரிய நபர் ஒருவர் கொன்று சாப்பிட்ட பொதுமக்களின் செயல் காட்டுமிரண்டித்தனமாக உள்ளது.
[ Saturday, 01-11-2014 06:43:07 GMT ]
தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு தண்டனை விதித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 01-11-2014 06:41:04 GMT ]
இந்திய அணித்தலைவர் டோனி எப்போதும் சிறந்த அணித்தலைவராகவே இருக்கிறார் என்று அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
[ Saturday, 01-11-2014 07:00:15 GMT ]
பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள இன்றைய தலைமுறையினர், சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகின்றனர்.
[ Saturday, 01-11-2014 02:05:50 GMT ]
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Saturday, 01-11-2014 10:17:12 ] []
கடந்த புதன்கிழமை காலை தியத்தலாவைக்கு அருகில் அமைந்துள்ள கொஸ்லாந்த, மீரியபெத்த பெருந்தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு நூற்றுக்கணக்கான லயன் அறைகளை புதைத்தது.