செய்தி
வட, கிழக்கு மாணவர்களை குறி வைக்கும் நாமல் ராஜபக்ஷ
[ சனிக்கிழமை, 19 சனவரி 2013, 05:40.55 AM GMT ]
வடக்கு, கிழக்கு மாகாண மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்துவதற்காக சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது.

இதற்கமைவாக, நான்கு கோடி ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை சீன அரசாங்கம் கையளித்துள்ளது.

இலங்கைக்கான சீனத் தூதுவர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் விளையாட்டு உபகரணங்களை அலரி மாளிகையில் இன்று கையளித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய சீன இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யுத்தத்தின் பின்னர் பிள்ளைகளின் மனோநிலையை வழமையான நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இங்கு குறிப்பிட்டார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விளையாட்டு, கலாசாரத் துறைகளை மேம்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சீனா விளையாட்டுத்துறை பயிற்சிக்காக எதிர்காலத்தில் ஒத்துழைப்பு வழங்கும் என்று இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதியளித்தார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 21-12-2014, 12:58.38 PM ]
அம்பாந்தோட்டையில் வீதியின் எதிர்ப்பு அமைப்பின் ஊடாக மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட கலைஞரான ஜயதிலக்க பண்டார ஆளும் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளார்.
[ Sunday, 21-12-2014, 12:40.12 PM ]
எதிர்வரும் 23,24ம் திகதி தபால்மூலமாக வாக்களிக்க வேண்டிய அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், அதிபர், ஆசிரியர்கள் உட்பட தமிழ் பிரமுகர்கள் அனைவரும் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக வாக்களிக்க வேண்டும் என அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார்.
[ Sunday, 21-12-2014, 11:34.38 AM ]
யுத்தத்திற்குப் பின்னர் வடபகுதி முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டார் இயக்குனர் இமையம்.
[ Sunday, 21-12-2014, 11:33.43 AM ]
எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதற்கான மலையக மக்கள் முன்னணியின் தலைவர்களிடம் ஒரு செயற்குழு சட்டம் ஒன்று இன்று ஹட்டனில் இடம்பெற்றது.
[ Sunday, 21-12-2014, 11:10.02 AM ]

அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கு எத்தனோல் மதுசார அனுமதிப் பத்திரங்கள் இருப்பதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

[ Sunday, 21-12-2014 12:42:34 GMT ]
ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து தப்பி ஓடிய 100 வெளிநாட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Sunday, 21-12-2014 08:07:38 GMT ]
தாய்லாந்தில் திருமணம் செய்ய விரும்பும் இந்தியர்களுக்கு, விமானம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தரத் தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் பிரயூத் சனோச்சா கூறியுள்ளார்.
[ Sunday, 21-12-2014 07:37:34 GMT ]
ஷிகர் தவானுக்கு ஏற்பட்ட காயத்தால், முன்னதாக களமிறக்கப்பட்டதால் கோஹ்லி கடும் கோபமடைந்துள்ளார்.
[ Sunday, 21-12-2014 08:27:37 GMT ]
பூமிக்கடியில் விளையும் காய்கறிகள் ஏராளமான மருத்துவ பலன்களை தருகிறது.
[ Sunday, 21-12-2014 00:10:40 GMT ]
தமிழ் சினிமாவின் கரீனா கபூர் என்றால் தமன்னா தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 21-12-2014 03:06:35 ]
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும், மூன்று வாரங்கள் கூட இல்லாத நிலையில், ஜனநாயக ரீதியான தேர்தலை விரும்புவோருக்கு உள்ளூர கலக்கம் அதிகரித்து வருகிறது. இந்தத் தேர்தல் நியாயமாக நடத்தப்படுமா என்பதே அந்தக் கலக்கத்துக்கான காரணம்.