செய்தி
 Photo
மிருகங்களை விட கேவலமாக நடத்தும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள்: சிறீதரன் எம்பியிடம் கண்ணீர் மல்கிய மருதநகர் மக்கள்!
[ திங்கட்கிழமை, 21 சனவரி 2013, 08:27.42 AM GMT ]
நிம்மதியாக வாழ ஒரு துண்டு காணியும், அரை நிரந்தர வீடும் கேட்டதற்காக ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும் தம்மை மிருகங்களை விடவும் கேவலமாக நடத்துவதாக பன்னங்கண்டி மக்கள் கண்ணீர் மல்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனிடம் கூறியுள்ளனர்.

கடந்த 30 வருடத்திற்கும் மேலாக பன்னங்கண்டி- மருதநகர் கிராமத்தில் வாழும் மக்களுக்கு இதுவரை நிரந்தரமாக ஒரு காணியும், வீடும் இல்லாத நிலையில், வயல் நிலங்களில் வாழ்ந்து வரும் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் மழையினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

தற்போதும் 28 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பன்னங்கண்டி பாடசாலையில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட்டபோதே மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றனர்.

அங்கு அவர்கள் தொடந்து தெரிவிக்கையில்,

ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் காணி பெற்றுத் தருவதாக கூறி எம்மை ஏமாற்றி தமது அரசியற் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். புதிய கட்டிடங்கள் திறப்பதற்கும், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கும் காணி கொடுப்பதற்கான பதிவு என்ற பெயரில் பேருந்துகளில் அழைத்துச் சென்றுவிட்டு அவர்களின் தேவைகள் முடிந்தவுடன் கைவிட்டு விடுகிறார்கள்.

இறுதியில் காணியும் இல்லாமல், சாப்பாடும் இல்லாமல் நடந்து ஊர் திரும்புகின்றோம். இதுவே கடந்த 3வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஒரு அரைநிரந்தர வீடு கொடுங்கள் எனக் கேட்டால் பிரதேச செயலர் கேட்கிறார் ஏன் உங்களுக்கு கணவன்மார் இல்லையா? அவர்கள் எங்கே என்று?

அதுபோதாதென்று கதைக்கப்பேச தெரியாதவர்கள் என்றும், யாருடன் எப்படிப் பேச வேண்டும் என்றும் உங்களுக்கு தெரியாது என்றும் மிகவும் கேவலமான முறையில் மக்களுக்கு மத்தியில் வைத்து திட்டியனுப்புகின்றார்.

இந்த நிலையில் ஒரு வீடு கேட்டதற்காக மிருகங்களை விடயும் மோசமாக நடத்தப்படுகின்றோம். அரசியல் வாதிகளும் அவ்வாறே நடந்து கொள்கின்றார்கள்,  காணி கேட்டால் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் டோக்கன் தருகிறார்கள். 15 நாட்களில் வீடு தருகிறோம் என்கிறார்கள். ஆனால் இன்றுவரை 3 வருடத்திற்கு முன்னர் மீள்குடியேற்றத்தின்போது கொடுத்த தறப்பாள் கூடாரத்தில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்நிலையில் யாரிடம் செல்வது, எமது வேதனைகளை தீர்க்க என்ன வழி உள்ளது என்று தெரியாமல் கடும் மழை, சேறு, சகதிகளுக்குள்ளும் வெயிலுக்குள்ளும் வருடத்துக்கு பல தடவைகள் இடம்பெயர்ந்து கொண்டு விலங்குகளிலும் பார்க்க மோசமான நிலையில் வாழ்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் குறித்து தம்மால் முடிந்த உதவிகளை மிகவிரைவில் செய்வோம் என பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 01-11-2014, 08:45.15 AM ]
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கிடையில் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
[ Saturday, 01-11-2014, 08:19.38 AM ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து  கொண்ட, சீனப் பிரஜைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

[ Saturday, 01-11-2014, 08:12.42 AM ]
கொஸ்லாந்த மண்சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு பூணாகலை தமிழ் மகாவித்தியாலய முகாமில் தஞ்சமடைந்துள்ளோரில் 76 பெண்களுக்கு மாற்றுடை இல்லாமல் அல்லலுறுகின்றனர் என்று அங்கிருந்து மனித அபிவிருத்தித் தாபன கிழக்கு மாகாண இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் தெரிவித்தார்.
[ Saturday, 01-11-2014, 08:08.12 AM ]
கொஸ்லாந்த மீரியபெத்த தோட்ட பிரதேசத்தில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான தோட்ட நிறுவனத்திற்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லை என இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார்.
[ Saturday, 01-11-2014, 07:28.58 AM ]
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சொறிக்கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நான்கு வயது சிறுவன் நிலத்தடி கிணறில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
[ Saturday, 01-11-2014 07:47:38 GMT ]
மெக்சிகோ நாட்டை சேர்ந்த புகைப்படகாரர் ஒருவர் சுறா மீனுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
[ Saturday, 01-11-2014 06:43:07 GMT ]
தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை அரசு தூக்கு தண்டனை விதித்திருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
[ Saturday, 01-11-2014 06:41:04 GMT ]
இந்திய அணித்தலைவர் டோனி எப்போதும் சிறந்த அணித்தலைவராகவே இருக்கிறார் என்று அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.
[ Saturday, 01-11-2014 07:00:15 GMT ]
பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளின் பக்கம் ஈர்க்கப்பட்டுள்ள இன்றைய தலைமுறையினர், சத்தான காய்கறிகளை ஒதுக்கிவிடுகின்றனர்.
[ Saturday, 01-11-2014 02:05:50 GMT ]
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் என்னை அறிந்தால் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 31-10-2014 02:47:48 ]
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.