செய்தி
"பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை" ! ஹத்துருசிங்கவின் குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுப்பு
[ வெள்ளிக்கிழமை, 28 டிசெம்பர் 2012, 12:00.48 AM GMT ] [ பி.பி.சி ]
மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் யாழ். இராணுவ தளபதி ஹத்துருசிங்க பீடாதிபதிகளிடம் கூறியிருந்த குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுத்துள்ளனர்.

இது குறித்து அறியவருவதாவது:

இலங்கையின் வடக்கே யாழ் பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் தடைபட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகும் நிலையில், அங்கு கல்விச் செயற்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான வழிவகைகள் குறித்து பல்கலைக்கழக நிரிவாகமும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களும் முயற்சி மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதன் ஒரு பகுதியாக, யாழ் பல்கலைக்கழகத்தின் முக்கிய பேராசிரியர்கள் குழு ஒன்று, கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களையும் வெலிக்கந்த முகாமுக்குச் சென்று பார்வையிட்டிருக்கின்றது.

இந்தக் குழுவினருடன் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர்களும் சென்றிருந்தனர்.

இவர்கள், தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களுடன் சுமார் ஒன்றரை மணி நேரம் உரையாடியிருக்கின்றார்கள்.

மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வுப் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, பல்கலைக்கழக நிர்வாகத்தினருடனான சந்திப்பின்போது அண்மையில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக தாங்கள் அந்த மாணவர்களிடம் கேட்டதாகவும், ஆனால் அந்த மாணவர்கள் தாங்கள் அவ்வாறு எவரிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவிக்கவில்லை என்று கூறியிருப்பதாகவும் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பிரிவின் பீடாதிபதி பேராசிரியர் பசுபதி சிவநாதன் தெரிவித்தார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் விடுதலைக்காக யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துக் கூறியதுடன், தடுப்பில் இருந்தவாறே கல்வியை அவர்கள் தொடர்வது பற்றியும் தாங்கள் பேசியதாகவும் பேராசிரியர் சிவநாதன் கூறினார்.

எனினும் மாணவர்கள் தமது படிப்பை அங்கு தொடர்ந்தாலும், தமது இறுதிப் பரீட்சைக்குரிய ஆய்வுக் கட்டுரையை தடுப்பு முகாமுக்குள் இருந்தவாறே தயார் செய்ய முடியாது என கூறியிருக்கின்றனர்.

இந்த சந்திப்பின் போது, 'தாம் எப்போது இந்த இடத்தில் இருந்து வெளியில் வருவோம் என எதிர்பார்த்து காத்திருப்பதாக' மேற்படி மாணவர்கள் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட பீடாதிபதியொருவர் தெரிவித்தார்.

உளவளத்துணை எப்போது முடியுமென்றும் மாணவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவார்கள் என்ற விபரங்களையும் அறிந்து கொள்வதற்கு உரிய அதிகாரிகள் அங்கு இருக்கவில்லை என்று மேற்படி பீடாதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விடுதலை செய்யப்படும் வரையில் தாங்கள் விரிவுரைகளுக்குச் செல்லப் போவதில்லை என தெரிவித்துள்ள ஏனைய மாணவர்கள் இதனைத் தாங்கள் ஒரு போராட்டமாக செய்யவில்லை என்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு தங்களுக்கு இதைத்தவிர வேறு மார்க்கம் இல்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

தடைபட்டுள்ள கல்விச் செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும் என்று அரச தரப்பினர் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தடுப்பில் இருந்து கொண்டு தாங்கள் எந்தவிதமான முடிவையும் எடுக்க முடியாது என தெரிவித்துள்ள மாணவர்கள், நிர்வாகம் மற்றும், பேராசிரியர்கள், பல்கலைக்கழக மூதவை ஒன்றிணைந்து மாணவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என தடுப்பில் உள்ள மாணவர்கள் தங்களிடம் கூறியிருப்பதாகவும் பேராசிரியர் சிவநாதன் தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Sunday, 23-11-2014, 08:46.34 AM ]

ஐந்தரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததையடுத்து பாதுகாப்பு கருத்தரங்குகளை ஒழுங்கு செய்வதில் பாதுகாப்பு அமைச்சு அக்கறை காண்பித்து வருகிறது.

[ Sunday, 23-11-2014, 08:11.20 AM ]
ஜனாதிபதிக்கு கொடுத்த ஆதரவை பற்றி மீண்டும் சிந்திக்க வேண்டியுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் ஏ.லோரண்ஸ் தெரிவித்தார்.
[ Sunday, 23-11-2014, 07:33.27 AM ]
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புனித பாப்பரசர் முதலாவது பிரான்ஸிசின் நாட்டுக்கான விஜயத்தில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
[ Sunday, 23-11-2014, 06:59.39 AM ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை நிறுத்தும் தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச சதித்திட்டங்கள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
[ Sunday, 23-11-2014, 06:44.37 AM ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வரவு காரணமாக கடும் தோல்விப் பயத்தில் உள்ள ஆளுங்கட்சி வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட ஆரம்பித்துள்ளது.
[ Sunday, 23-11-2014 07:33:47 GMT ]
உலகில் கடந்த வாரம் நடைபெற்ற சம்பவங்களின் புகைப்பட தொகுப்புகள் இதோ,
[ Sunday, 23-11-2014 06:43:18 GMT ]
தமிழக மீனவர்கள் ஐந்துபேர் விடுதலையில் இந்தி நடிகர் சல்மான்கான் மற்றும் பத்திரிகையாளர் ராஜெட் ஷர்மா மறைமுகமாக உதவியதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
[ Sunday, 23-11-2014 05:15:38 GMT ]
இலங்கைக்கு எதிராக 2003ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியின் போது தான் எதிர்கொண்ட தர்ம சங்கடமான நிலை பற்றி சச்சின் கூறியுள்ளார்.
[ Sunday, 23-11-2014 03:16:54 GMT ]
இத்தாலியைச் சேர்ந்த தொழில்நுட்ப வடிவமைப்பாளர் ஒருவர் 3டி பிரிண்ட் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பயோனிக் கை ஒன்றினை உருவாக்கியுள்ளார்.
[ Sunday, 23-11-2014 00:49:49 GMT ]
இந்த வருடம் மட்டுமில்லாமல் அடுத்த வருடம் ஆரம்பம் முதலே சினிமா ரசிகர்களுக்கு விருந்து தான்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Sunday, 23-11-2014 03:40:50 ]
இந்தியப பெருங்கடல் பிராந்தியத்தில் தனது விநியோகப் பாதையின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இலங்கை உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக தி நமீபியன் என்ற நமீபிய நாட்டு நாளிதழ் வெளியிட்ட செய்தி கடந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.