செய்தி
உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி
[ வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012, 12:53.28 AM GMT ]
மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது.

மேலும் குறுந்தகவல், ஈமெயில் மூலமாகவும் இது போன்ற வதந்திகளை நாசாவை ஆதாரம் காட்டி தகவல்களை வெளியிட்டு வருகின்றனர் சிலர். இந்நிலையிலேயே நாசாவின் சிரேஷ்ட விஞ்ஞானி டேவிட் மொரிஸன் இவற்றையெல்லாம் மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து வெளிடுகையில்,

உலகம் நாளை (இன்று) அழிந்துவிடும் என்பதை நாசாவினை மேற்கோள் காட்டி வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. மேலும் தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.

அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி.

இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களிலும் எதுவித உண்மையும் இல்லை.

இது தொடர்பாக நாசா கருத்துக்கள் வெளியிட்டுள்ளதாக வரும் செய்திகள் போலியானது. எனவே மக்கள் இது தொடர்பில் பீதியடைய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

Content of Popup
உங்கள் கருத்தை பதிவு செய்ய
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 01-11-2014, 01:23.36 AM ]
கொஸ்லாந்தை மீரியபெத்தை தோட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இந்தியா முதல் கட்ட உதவியாக 50 இலட்சம் இந்திய ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 01-11-2014, 01:13.49 AM ]
மண் சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்து மீரியபெத்தை தோட்ட மக்களுக்கு, அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஒரு மாத சம்பளத்தை  வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 01-11-2014, 01:08.36 AM ]
கொஸ்லந்த மீரியபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
[ Saturday, 01-11-2014, 12:59.42 AM ]
இலங்கையில் இந்திய மீனவர்கள் ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் உடனடியான தீர்வை காண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
[ Saturday, 01-11-2014, 12:53.09 AM ]
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்த முன்னணி சோசலிச கட்சி தீர்மானித்துள்ளது.
[ Friday, 31-10-2014 12:34:42 GMT ]
யாஸிதி இனத்தை சேர்ந்த 19 வயது சிறுமி ஒருவர் தான் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் சந்தித்த கொடுமைகளை பற்றி அளித்த பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
[ Friday, 31-10-2014 11:52:07 GMT ]
இந்தியாவில் முதன்முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
[ Friday, 31-10-2014 10:56:04 GMT ]
பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் அமைத்த களத்தடுப்பு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.
[ Friday, 31-10-2014 12:08:57 GMT ]
உடல் உறுப்புகளைப் போலவே இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்களின் அளவை பராமரிப்பது மிகவும் முக்கியமானது.
[ Friday, 31-10-2014 02:07:49 GMT ]
அனுஷ்கா 30 வயது ஆகியும் திருமணம் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 31-10-2014 02:47:48 ]
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.