செய்தி
இறுதிக்கட்ட யுத்தத்தில் இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க ஐ.நா தவறியது: ஐநாவின் ஆய்வு அறிக்கை தகவல்
[ செவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2012, 05:17.18 PM GMT ] [ பி.பி.சி ]

இலங்கையில் முன்றரை ஆண்டுக்கு முன் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களை அழிவிலிருந்து பாதுகாக்க ஐ.நா சபை மோசமாகத் தவறியுள்ளது என்று .ஐநாவுக்குள் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐநாவுக்குள் உள்ளளவில் நடத்தப்பட்ட ஆய்வுடைய அறிக்கையின் வரைவு பிரதி ஒன்று பிபிசியிடம் கசியவிடப்பட்டுள்ளது. தாங்கள் பாதுகாக்க வேண்டிய மக்களை .ஐ.நா கைவிட்டிருந்தது என்று இந்த அறிக்கை முடிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஆற்றிவந்த பணியின் நோக்கம் யுத்தத்தை தடுப்பது என்பதல்ல, மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கச் செய்வதுதான் அவர்களுடைய வேலை. ஆனால் கொழும்பில் பணியாற்றிய ஐ.நா பணியாளர்களுக்கு அவ்வாறான உதவிகளை செய்வதற்கான தகுதிகளோ, அனுபவமோ இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை விவரிக்கிறது.

இலங்கையின் கொடூரமான யுத்தத்தால் எழுந்த சவால்களை இவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐநா தலைமையகத்திலிருந்து இவர்களுக்கு ஒழுங்கான உதவிகளும் கிடைக்கவில்லை என்றும் இந்த அறிக்கை கூறுகிறது.

பயங்கரவாதத்தை நசுக்குவதாக சூளுரைத்துவிட்டு அரசாங்கம் முன்னெடுத்த விஷயங்களை சர்வதேச நாடுகள் பெருமளவில் கண்டும்காணாமல் இருந்துவிட்டனர் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

ஆக கட்டமைப்பு ரீதியாகவே கூட பெரும் தவறுகள் நடந்துள்ளன என்றும், இப்படி ஒன்று எதிர்காலத்தில் நடக்கவே கூடாது என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இறுதிக்கட்ட யுத்தப் பிரதேசத்துக்குள்ளிருந்து வெளியேற முடியாமல் ஒரு சிறு இடத்தில் பொதுமக்கள் மாட்டப்பட்டிருந்தனர். செப்டம்பர் 2008ல், ஐநா தனது பணியாளர்களை இலங்கையின் வடக்கிலுள்ள யுத்த பகுதிகளிலிருந்து விலக்கிக்கொண்டிருந்தது.

ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்புக்கு தாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது என்று இலங்கை அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து அது இம்முடிவை எடுத்திருந்தது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த எச்சரிக்கையை ஐநா எப்போதும் எதிர்த்துக் கேள்வி கேட்கவே இல்லை என்றும், ஐநா அந்த இடத்திலிருந்து விலகியதால் யுத்த பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைப்பதிலும் அவர்களுடைய உயிர்கள் பாதுகாக்கப்படுவதிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டதென்று இந்த அறிக்கை கூறுகிறது.

யுத்தப் பிரதேசத்துக்குள் லட்சக்கணக்கான மக்களை விட்டுவிட்டு ஐநா பணியாளர்கள் வெளியேறிய பின்னர், அரச படைகளும் விடுதலைப் புலிகள் தரப்பும் அம்மக்களை தமக்கு வேண்டிய விதத்தில் பயன்படுத்திக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளை அவர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியும், கட்டாயப்படுத்தி சண்டையில் ஈடுபட வைத்தும் வந்தனர் என்றால், அரச படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு அவர்கள் விலைகொடுத்தும் வந்தனர்.

இலங்கையில் மிக மோசமான, ஒரு பெருந்துயர சூழல் நிலவியதாக ஐநாவின் இந்த அறிக்கை கூறுகிறது.

பொதுமக்கள் கொல்லப்படாமல் தடுப்பதற்கு முயல வேண்டும் என்பதை கொழும்பிலுள்ள மூத்த ஐநா அதிகாரிகள் தங்களது பொறுப்பாகவே கருதியிருக்கவில்லை என்றும், நியூயார்க்கிலுள்ள ஐநா தலைமையக அதிகாரிகளும் அவர்களுக்கு அறிவுறுத்தல்களையோ மாற்று உத்தரவுகளையோ வழங்கியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை விமர்சித்துள்ளது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை வலுவான உத்திகள் மூலம் தெளிவாக கணக்கிட்டு வருகிறது. ஐநா என்று அதுவே கூறினாலும், அந்த விவரங்களை ஐநா பிரசுரிக்கத் தவறியது என்பதையும் இந்த அறிக்கை விவரமாக எடுத்துரைக்கிறது.

மேலும் பொதுமக்கள் உயிரிழப்புகளில் பெரும்பான்மையானவற்றுக்குக் காரணம் அரச படையினரின் ஷெல் தாக்குதல்தான் என்பதை இலங்கை அரசின் அழுத்தங்கள் காரணமாக ஐநா தெளிவுபடுத்தியிருக்கவில்லை என்றும் இந்த அறிக்கை குற்றம்சாட்டுகிறது.

ஐநா கட்டமைப்புக்குள் ஒரு விஷயத்துக்கு மாறாக இன்னொரு விஷயத்தை விட்டுக்கொடுப்பது என்ற ஒரு கலாசாரம் அதிகம் என்று இந்த அறிக்கை கூறுகிறது.

யுத்தப் பிரதேசத்தில் மக்களுக்கு சென்று உதவ கூடுதலான இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி வெளியில் பேசாமல் இருந்துவிட ஐநா பணியாளர்கள் தீர்மானித்திருந்தனர் என்று இது சுட்டிக்காட்டுகிறது.

ஐநாவில் மூத்த அதிகாரியாக இருந்த எட்வர்ட் மோர்டிமர் தற்போது இலங்கையில் சமாதானத்துக்கும் நீதிக்குமான முன்னணி என்ற அமைப்புக்கு தலைமையேற்றுள்ளார்.

உறுப்பு நாடுகளின் அரசாங்கங்களை ஒரேயடியாக எதிர்த்துவிட முடியாது மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதி வேண்டும் என்பதற்காக இவர்களுடன் தொடர்பிலேயே இருந்துவர வேண்டும் என்ற அழுத்தம் ஐநாவுக்கு இருப்பது, தார்மீக ரீதியில் சில தவறான முடிவுகளை ஐநா எடுப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது என்று மோர்டிமர் விளக்கினார்.

இலங்கையில் யுத்தத்தின் இறுதிக்கட்டம் அரங்கேறியபோது ஐநா பாதுகாப்பு சபையோ, வேறு முக்கிய ஐநா நிறுவனங்களோ ஒருமுறைகூட உத்தியோகபூர்வமாகக் கூடியிருக்கவில்லை.

ஐநா உறுப்பு நாடுகளுக்கு எது தெரியவேண்டுமோ அதனை வெளியில் சொல்லாமல், அவர்கள் எதனைக் கேட்க விரும்புவார்களோ அதனைத்தான் ஐநா வெளியில் சொன்னது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Saturday, 22-11-2014, 11:44.33 PM ]
1999ம் ஆண்டு தேர்தல் மோசடியானது என தற்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Saturday, 22-11-2014, 11:31.53 PM ]
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவின் தேர்தல் மாவட்டமான பொலன்னறுவைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விஜயம் செய்யவுள்ளார்.
[ Saturday, 22-11-2014, 11:18.37 PM ]
ஆளுங்கட்சியில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து இணைந்து கொள்ளலாம் என்று அமைச்சர் பசில் ராஜபக்ச பகிரங்க அழைப்ப விடுத்துள்ளார்.
[ Saturday, 22-11-2014, 07:12.24 PM ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
[ Saturday, 22-11-2014, 04:29.53 PM ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எந்த நிகழ்வு நடைபெறும் போதும் எஸ்.டபில்யூ.ஆர். டி. பண்டாரநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோரை நினைவு கூருவதை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்ச உத்தரவிட்டதாக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
[ Saturday, 22-11-2014 13:11:06 GMT ]
ஐ.எஸ்.ஐ.எஸ் அழிக்க குர்திஷ் படைகளுடன் அயல்நாட்டு இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
[ Saturday, 22-11-2014 13:41:22 GMT ]
அரியானா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால் தினமும் பாலில் குளிப்பதாக தெரியவந்துள்ளது.
[ Saturday, 22-11-2014 14:15:49 GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்காக இந்திய டெஸ்ட் அணிக்கு, இருநாள் பயிற்சி ஆட்டங்கள் போதுமானதல்ல என்று கங்குலி அதிருப்தி தெரிவித்துள்ளார்.
[ Saturday, 22-11-2014 08:47:28 GMT ]
பொதுவாக கீரை வகைகள் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தையும் கண்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
[ Saturday, 22-11-2014 05:34:38 GMT ]
திரையுலகம் பொறுத்தவரை குடும்பம் குடும்பாக சினிமாவிற்குள் நுழைந்து கொண்டே தான் இருப்பார்கள்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 21-11-2014 23:38:50 ]
அண்மையில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை வாசித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வசனத்தை கடந்து போக இயலாமலேயே இருந்தது. அந்த இடம் ஒரு உணர்ச்சிகரமான காட்சி.