செய்தி
திவிநெகும தொடர்பான விளக்கம் சபாநாயகருக்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும்: சமால் ராஜபக்ச
[ செவ்வாய்க்கிழமை, 09 ஒக்ரோபர் 2012, 11:55.27 AM GMT ]
திவிநெகும சட்டம் தொடர்பிலான உயர் நீதிமன்றின் விளக்கம் சபாநாயருக்கே அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டுமேன சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

திவிநெகும சட்டத்தை அமுல்படுத்துவதற்கு வட மாகாண ஆளுனரின் இணக்கம் போதுமானதா என்பது குறித்து உயர் நீதிமன்றிடம், மேன்முறையீட்டு நீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது.

இதன் அடிப்படையில் உயர் நீதிமன்றம் திவநெகுமு சட்டம் தொடர்பில் இன்று நாடாளுமன்ற செயலாளருக்கு விளக்க அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

எனினும், இந்த விளக்க அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், திவிநெகும சட்டம் தொடர்பிலான விளக்கம் நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கருதப்பட முடியாது என சபாநாயகர் சமால் ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில் இடம்பெற்று வரும் அதிகார முரண்பாட்டின் மற்றுமொரு பரிமாணமாக இந்த சம்பவத்தை அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Wednesday, 26-11-2014, 05:24.58 PM ]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பில் அகில இலங்கை மக்கள் (முஸ்லிம்) காங்கிரஸ் எதிர்வரும் சனிக்கிழமையன்று தீர்மானிக்கவுள்ளது.

[ Wednesday, 26-11-2014, 04:57.35 PM ]

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் யானைப் பிரச்சினை உட்பட வீடு, குடிநீர் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகவும் அவற்றை நிவர்த்தி செய்து தர வேண்டும் என்று கோரியும் இப்பிரதேசங்களின் பெண்கள் எதிர்ப்பு பேரணியொன்றை இன்று நடத்தினர்.

[ Wednesday, 26-11-2014, 04:50.39 PM ]
தமிழீழ மாவீரர் நாள் நாளைய தினம் உலகம் முழுவதும் அனுட்டிக்கப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாணங்களில் படையினர் மற்றும் படைப் புலனாய்வாளர்களின் கடுமையான நெருக்குவாரங்கள் மத்தியில் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டின் பாடசாலைள் சிலவற்றில் மாவீரர் தின பிரசுரங்கள் போடப்பட்டுள்ளது.
[ Wednesday, 26-11-2014, 04:21.43 PM ]

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவு அகற்றல் தொடர்பில் மீண்டும் நல்லூர் பிரதேச சபை சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில், 2.5மில்லியன் ரூபா
செலவில் நாவற்குழி பகுதியில் கழிவு அகற்றலுக்காக போடப்பட்ட வீதியும் வெள்ளம் கொண்டுபோகும் நிலையில் காணப்படுகின்றது.

[ Wednesday, 26-11-2014, 04:17.38 PM ]

யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி உதயபெரேரா கொழும்பு இராணுவ கட்டளைத் தலைமையகத்திற்கு திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

[ Wednesday, 26-11-2014 07:36:39 GMT ]
வங்கதேசத்தின் அமைச்சர் ஒருவர் ஹஜ் யாத்திரையை விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Wednesday, 26-11-2014 12:22:41 GMT ]
திமுக தலைவர் கருணாநிதிக்கு சட்டமன்றத்திற்கு வந்து பேசக் கூடிய தைரியம் உள்ளது என்றால், 4.12.2014 அன்று கூட்டப்பட்டுள்ள சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு வந்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 26-11-2014 10:15:27 GMT ]
அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், ஷெட்பீல்டு ஷில்டு முதல் தர போட்டியில் விளையாடிய போது பவுன்சர் பந்து தலையில் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார்.
[ Wednesday, 26-11-2014 13:10:40 GMT ]
நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து.
[ Wednesday, 26-11-2014 03:39:21 GMT ]
தமிழ் சினிமாவில் தன் வித்தியாசமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 26-11-2014 00:43:03 ]
கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ' அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்' என்று..,