செய்தி
13ம் திருத்தச் சட்டமே வடக்கு இளைஞர்கள் ஆயுதங்களை கீழே வைக்கக் காரணம்: டியூ.குணசேகர (செய்தித் துளிகள்)
[ வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, 02:11.44 AM GMT ]
13ம் திருத்தச் சட்டம் காரணமாகவே வடக்கு- கிழக்கு இளைஞர்கள் ஆயுதங்களை கீழே வைத்தனர் என அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார்.

 

ஆயுதங்களை ஏந்திய வடக்கு இளைஞர் யுவதிகள் ஆயுதங்களை களைந்து ஜனநாயக அரசியலில் இணைந்து கொண்டனர். 13ம் திருத்தச் சட்டத்தின் காரணமாகவே இது சாத்தியமானது.

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரும் பலருக்கு இது நினைவில்லை. 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படுவதன் மூலம் மீண்டும் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடும்.

13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையினால் தமிழ் புலம்பெயர் மக்களும், புலி ஆதரவாளர்களுமே அதிகளவில் சந்தோசப்படுவார்கள். பிரபாகரனின் போரை நியாயப்படுத்தும் வகையில் எவரும் செயற்படக் கூடாது.

இந்த நிலைமைகளை புரிந்து கொள்ளாமல் ஒரு சிலர் செயற்படுகின்றமை வருந்தத்தக்கது என டியூ. குணசேகர தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்றுக்க அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ள முடியும் - அருன்திக பெர்னான்டோ

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிச் செல்ல முடியும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருன்திக பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்க விரோதமான ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நபர்கள் விலகிக்கொள்ள வேண்டும்.

ஆளும் கட்சியின் சிலர் எதிர்க்கட்சிகளுக்கு கோசம் எழுப்ப ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்தியாவும் தொடர்புபட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கத்திற்கு பிணக்குகள் கிடையாது. எவ்வளவு பலம்பொருந்தியவர்கள் என்றாலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட கருத்துக்களை வெளியிடக் கூடாது என அருன்திக்க பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

காப்புறுதி பிணைப்பணம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 31-10-2014, 07:54.48 AM ]
மகிந்த ராஜபக்சவுக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எந்த உரிமையுமில்லை எனவும் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது சட்டவிரோதமானது எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-10-2014, 07:42.15 AM ]
பாப்பரசர் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க திருச்சபை நேற்று அறிவித்தததாக த இண்டிபெண்டன் இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
[ Friday, 31-10-2014, 07:36.14 AM ]

மலையகத்தில் தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக பிரதான நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

[ Friday, 31-10-2014, 06:53.44 AM ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் கீழ் பயங்கரவாதம் பிறப்பெடுத்து வளர்ந்ததுடன் அது வளர்க்கப்பட்டது என ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
[ Friday, 31-10-2014, 06:42.03 AM ]

இலங்கையில் குடிநீரினால் பரவும் வயிற்றோட்டம், நெருப்புக்காய்ச்சல் நோய்களுக்கு யாழ் குடாநாட்டு மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

[ Friday, 31-10-2014 07:08:45 GMT ]
உலகின் வெளிப்படுத்தப்படாத மர்மங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அட்லாண்டிஸ் என்ற தொலைந்த நகரம் எங்கே இருந்தது? இப்போது எங்கே இருக்கிறது?
[ Friday, 31-10-2014 06:13:22 GMT ]
தமிழகம் முழுவதும் ஆவின் பால் விலை உயர்வை பற்றித் தான் பேச்சு.
[ Friday, 31-10-2014 05:19:19 GMT ]
இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
[ Friday, 31-10-2014 07:19:34 GMT ]
இன்றைய காலத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் உலகத்தில் பயணித்து வருகிறோம்.
[ Thursday, 30-10-2014 08:25:48 GMT ]
மன்மதன் பாஸ்கி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் காமெடி படைப்பு ஊக்குவிப்பு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Friday, 31-10-2014 02:47:48 ]
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.