தம்புள்ளை பள்ளிவாசல் தாக்குதல் விசாரணை நடத்தப்படாமை குறித்து உலக தமிழர் பேரவை கண்டனம்
சிறுபான்மையினரின் மத உரிமைகளையும், உணர்வுகளையும் பெரும்பான்மை பௌத்த பிக்குகள் மதித்து நடவாமை இன்னும் தொடர்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட போதும், அதற்கு எதிராக இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாதுள்ளமை வருத்தமளிக்கிறது. இந்தநிலையில், இவ்வாறான சம்பவங்கள் இலங்கை அரசாங்கத்தின் துணையுடனே நடைபெறுகிறது என்று உலக தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.