உள்நாட்டு ஆங்கில பத்திரிகை ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மவுன் எலிசபத் வைத்தியசாலையின் ஒரு அறைக்கான நாளாந்த செலவு, இலங்கை பணத்தில் ஒரு லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சம் வரையில் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் படி துமிந்த சில்வாவின் அறை செலவுக்காக மாத்திரம் அவர் தங்கியுள்ள 180 நாட்களுக்கு, ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் முதல், மூன்றரை கோடிகள் வரையில் சென்றிருக்கும் என கூறப்படுகிறது.
இது தவிர உணவு, பராமரிப்பு சேவைகளுக்காக தனியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.