செய்தி
 Photo
கிழக்கில் தமிழ் மக்கள் தங்களது முழுமையான வாக்குப் பலத்தை காட்டவேண்டும்: த.தே.கூட்டமைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 24 யூலை 2012, 06:33.23 AM GMT ]
தமிழ் மக்கள் கடந்த காலத்தைபோல் அல்லாமல் நடைபெறப்போகும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் முழுமையாக தங்களது வாக்குப் பலத்தை அளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணசபை தேர்தலையொட்டி தெரிவுசெய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரான வி.ஆர்.மகேந்திரனின் படுவான்கரை பிரதேசத்துக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை கொக்கட்டிச்சோலையில் ஆரம்பமானது.

அக்கூட்டத்தில் வேட்பாளரான வி.ஆர்.மகேந்திரன், கடந்த காலத்தில் மட்டக்களப்பு நகரம் மற்றும் படுவான்கரை பிரதேச மக்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தவில்லையென தெரிவித்துள்ளதுடன் இம்முறை அவற்றை முழுமையாக பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

துரோகிகளுக்கு ஒருபோதும் துணைபோகாத மண்ணாக இந்த படுவான்கரை பிரதேசம் உள்ளது. இந்த மண் என்றும் தேசியத்துக்காகவும் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் மட்டுமே துணை நிற்கும்.

இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 07 ஆசனங்களைப்பெற்று கிழக்கு மாகாணசபையின் ஆட்சியை கைப்பற்றும் என்று முழுமையாக நம்புகின்றோம் என குறிப்பிட்டார்.

அதற்கு இந்த படுவான்கரை பிரதேச மக்கள் அணி திரண்டுவந்து வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என இங்கு கட்சி உறுப்பினர்களால் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கொக்கட்டிச்சோலை தமிழரசுக்கட்சியின் கிளையின் உறுப்பினர்களை அறிவுறுத்தும் கூட்டமாக இது நடத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா ஆகியோரும் பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Tuesday, 02-09-2014, 03:51.44 AM ]
“எந்த நாளும் நீங்கள் சொல்வதனையே கேட்கின்றோம், இப்போது நாங்கள் சொல்வதனை கேளுங்கள்” என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர், பிரதி அமைச்சரிடம் பகிரங்க கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
[ Tuesday, 02-09-2014, 02:53.37 AM ]

இலங்கையில் இருந்து பாகிஸ்தான் அகதிகளை உடனடியாக வெளியேற்றுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

[ Tuesday, 02-09-2014, 02:47.01 AM ]
சுற்றுலா மேம்பாடு கருதி இலங்கை வந்திருந்த சீன அழகிகள் 15 பேரும் நேற்றிரவு மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாகத் தாய்நாடு திரும்பிச்சென்றனர்.
[ Tuesday, 02-09-2014, 02:41.39 AM ]
தமிழகம் திருச்சி கருமண்டபம் என்ற இடத்தில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
[ Tuesday, 02-09-2014, 02:30.38 AM ]
இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இடம்பெறவிருந்த ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் (Asian Youth Games) டோகாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Monday, 01-09-2014 11:38:34 GMT ]
நைஜீரியாவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட நாயின் மாமிசத்தைச் சாப்பிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
[ Monday, 01-09-2014 13:23:33 GMT ]
355 ஆண்டுகாலமாக காவல்நிலையத்தின் அடையாளமாக இருந்த சிவப்பு நிற பெயின்ட்டுக்கு பதிலாக காவல்நிலைய கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
[ Monday, 01-09-2014 13:43:13 GMT ]
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹொக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் இலங்கையுடன் மோதுகின்றது.
[ Tuesday, 02-09-2014 03:11:34 GMT ]
அப்பிள் நிறுவனம் 5 பில்லியன் டொலர்கள் பணத்தை செலவு செய்து பிரம்மாண்ட வளாகம் ஒன்றினை அமைத்து வருகின்றது.
[ Monday, 01-09-2014 10:36:12 GMT ]
ஜிகர்தண்டா சிம்ஹா மற்றும் கருணாகரன் நடிப்பில் பத்ரியின் இயக்கத்தில் வெளியாக உள்ள ஆடாம ஜெயிச்சோமாடா இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடை பெற்றது.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Monday, 01-09-2014 01:17:31 ]
கடந்த 2012 ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் ரோம் சாசனத்தில் கைச்சாத்திடுமாறு இலங்கையை சில நாடுகள் அப்போது கோரிக்கை விடுத்திருந்ததது.