செய்தி
ஒலிவடிவம்:
தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களித்ததற்கான காரணங்கள்!- ஐ.நா. வில் இந்திய பிரதிநிதி
[ வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012, 12:00.49 AM GMT ] [ பி.பி.சி ]
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்துள்ளது. இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிப்பதற்கான காரணங்களை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இந்தியப் பிரதிநிதி விளக்கியிருந்தார்.

இலங்கையின் படிப்பினைக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை இந்தியா வரவேற்றிருந்தது.

இலங்கையில் வாழும் அனைத்து இன மற்றும் மதக் குழுக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையிலான அரசியல் தீர்வு மூலமான நல்லிணக்கத்தை அந்நாட்டில் கொண்டுவருவதற்கு இந்த பரிந்துரைகள் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருவதாய் இந்தியா நம்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வை இலங்கை அரசாங்கம் ஆர்வத்துடன் தலைமையேற்று முன்னெடுக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

13ஆவது அரசியல் சாசன சீர்திருத்தத்தையும் அதற்கும் மேற்பட்டும் இலங்கையில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை நோக்கி இலங்கை நடைபோட வேண்டும் என்று,ம் பரந்துபட்ட கலந்துரையாடலுடன் அரசியல் நடவடிக்கைகளை அது முன்னெடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

செய்த காரியத்துக்கு ஆட்களைப் பொறுப்பேற்கச் செய்வதிலும் மனித உரிமைகளை பேணுவதிலும் தனக்கு இருக்கின்ற சர்வதேச கடப்பாடுகளை நிறைவேற்றும் நோக்கில் இலங்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் நல்லிணக்கம், சமாதானம் போன்ற இலக்குகளை அடைய இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு போதிய அவகாசமும் செயல்படுவதற்கான இடமும் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்தது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை இலங்கை தமது இலட்சியங்களை எட்ட உதவியாக இருக்க வேண்டுமே ஒழிய தடையாக இருக்கக்கூடாது என்றும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Thursday, 27-11-2014, 01:37.40 PM ]
பொது வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன போட்டியில் இறங்கியுள்ள போதிலும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் அதிகமான வாய்ப்பு இன்னும் மகிந்த ராஜபக்ஷவிற்கே இருப்பதாக அரசியல் ஆய்வாளரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 27-11-2014, 01:02.52 PM ]
போர் எதிர்ப்பு, படையினருக்கு அவதூறு ஏற்படுத்தும் மேற்குலக சதித்திட்டகாரர்களின் திரைப்படம் என முத்திரை குத்தப்பட்ட சுலங்க எனு பிணிச (கற்று வீசுவதற்காக) என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் இயங்குனரான விமுக்தி ஜயசுந்தர கடந்த சில தினங்கள் அலரி மாளிகையில் தங்கியிருந்ததாக தெரியவருகிறது.
[ Thursday, 27-11-2014, 12:48.55 PM ]

எமது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் தியாகம் செய்த வீர மறவர்களை நினைந்து அவர்கள் மூலமாக புத்துயிர் பெறுவதற்காக ஒன்றாக கூடியிருக்கிறோம் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் தெரிவித்தார்.

[ Thursday, 27-11-2014, 12:29.11 PM ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அன்று 100 நாட்களில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக கூறி கடிதம் ஒன்றில் கையெழுத்திட்டு ஜே.வி.பியிடம் கொடுத்து வாக்குறுதியை நிறைவேற்றாது ஏமாற்றியதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
[ Thursday, 27-11-2014, 12:23.40 PM ]

தமிழனின் மனதினில் மாவீரர் தினம் என்றும் மாறாது தமிழ் இனத்தின் விடுதலை வீரர்களின் நினைவுகளை தடுக்க சிங்களம் நினைத்தால் அதற்கு எதிர் காலம் பதில் சொல்லும்.

[ Thursday, 27-11-2014 11:42:44 GMT ]
தென் ஆப்பிரிக்காவில் பிறந்த போது மாறிய 4 வயது குழந்தைகள் தற்போது வளர்த்தவர்களிடம் தான் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
[ Thursday, 27-11-2014 07:47:08 GMT ]
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி அபராதமும் விதித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
[ Thursday, 27-11-2014 06:52:02 GMT ]
பவுன்சர் பந்து வீசி பிலிப் ஹியூக்ஸை நிலைகுலைய வைத்த வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்.
[ Thursday, 27-11-2014 06:45:59 GMT ]
சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி இலைகள் பல நோய்களை விரட்டும் திறன் கொண்டது.
[ Thursday, 27-11-2014 02:49:59 GMT ]
மாவீரர்களை போற்றும் மாவீரர் தினம் இன்று. நம் பிறப்பிற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 26-11-2014 00:43:03 ]
கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ' அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்' என்று..,