செய்தி
ஐ.நாவில் அமெரிக்கா வெற்றி கண்டது! இலங்கைக்கு கிடைத்த இராஜதந்திர அடி!
[ வியாழக்கிழமை, 22 மார்ச் 2012, 11:12.29 AM GMT ]
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. இலங்கை அரசாங்கம் மாபெரும் இராஜதந்திரச் தோல்வியைச் சந்தித்துள்ளது.

கடந்த 4 வாரங்களாக, உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்புக்கு மட்டுமல்ல, இலங்கைத் தீவை மையப்படுத்திய உலக அரசியல் வெளியிலும், இப்பிரேரணை விவகாரம் முக்கிய விடயமாக மாறியிருந்தது.

இந்நிலையில் இன்று ஐ.நா கூட்டத் தொடர் அமர்வில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் இந்தப் பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

அமெரிக்காவின் பிரேரணையினை 24 நாடுகள் ஆதரித்தும், 15 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன.

8 நாடுகள் வாக்கெடுப்ப்பில் பங்கெடுக்கவில்லை.

அமெரிக்காவின் இந்தப் பிரேரணையினை தோற்கடிக்க இலங்கை பல்வேறு வழிமுறைகளையும் தீவிரமாக கையாண்ட போதும், இன்றைய வாக்கெடுப்பில் இலங்கை கண்டுள்ள தோல்வி, சிங்கள தேசத்துக்கு கிடைந்த மாபெரும் இராஜதந்திரத் தோல்வியாக பலரும் கருதுகின்றனர்.

முள்ளிவாய்க்கால் பேரவலம் எனும் மாபெரும் வரலாற்றுத் பெருந்துயரை சுமந்து நிற்கும் ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த, சிறு ஒத்தடமாக இந்தத் தீர்மானத்தை உலகத் தமிழர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில் கடந்த பல வாரங்களாக, ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரினை மையப்படுத்தி பல இராஜதந்திரச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவா்கள் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை தொடர்பில் ஒரு சுதந்திரமான விசாரணைப் பொறிமுறையொன்றின் அவசியத்தினை தமிழர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இன்று ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையானது, அதனை நோக்கிச் செல்வதற்குரிய ஒரு வாய்ப்பாகவும், முதல்படியாகவும் கொள்ளலாம் என தெரிவித்தார்.

அத்தோடு, ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு, தமிழர்கள் தொடர்சியாக குரல் எழுப்புவதோடு, சனநாயகரீதியாகவும், வலிமையான இராஜதந்திரச் செயற்பாடுகள் ஊடாகவும், இதனை தொடர்சியாக நாங்கள் வலியுறுத்துவோம் எனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவினால் கடந்த 07-03-12அன்று சமர்பிக்கப்பட்டுள்ள பிரேரணையின் வரைவு :

தீர்மான வரைபு: இலங்கையில் நல்லிணக்க மேம்பாடும் பொறுப்புக் கூறுதலும் (06-03-12)

ஐக்கிய நாடுகள் சாசனம், சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், மனித உரிமைகளுக்கான அனைத்துலக உடன்படிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய விதிகளுக்கு அமைவாக...

பயங்கரவாதத்திற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் அனைத்தும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் உறுப்பு நாடுகளது கடமைக்கு அமைவாகவும், குறிப்பாக பொருத்தமான சர்வதேச மனித உரிமைகள், பாதுகாப்பு, மனிதாபிமான விதிகளுக்கு அமைவாகவும்...

இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளையும் பரிந்துரைகளையும் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இவ்வறிக்கை வழங்கிய பங்களிப்பை ஏற்றும்..

சட்டத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற் போதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளையிட்டு பக்கசார்பற்ற விசாரணை மேற்கொள்ளுதல், வடக்கிலிருந்து இராணுவத்தை விலக்குதல், காணி தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பாரபட்சமற்ற பொறிமுறையை உருவாக்குதல், தடுத்து வைத்தல் தொடர்பான கொள்கைகளை மீளாய்வு செய்தல், சுயாதீனமான சிவில் சமூக கட்டமைப்புகளை பலப்படுத்துதல், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குதல் மூலம் இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காணுதல், அனைவரதும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், சட்ட ஆட்சி முறை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்கள் சார்ந்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை வரவேற்று...

சர்வதேச சட்ட விதிகள் தீவிரமாக மீறப்பட்டமை குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு போதுமான அளவு கவனம் செலுத்தவில்லை என்பதையும் கவனத்திற்கொண்டு..

1. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதுடன் நீதி, பொறுப்புப் கூறுதல், சகல இலங்கையர்க்கும் இடையிலான நல்லிணக்கம் போன்றவற்றை உறுதிப்படுத்த, பொருத்தமானதும் நம்பிக்கையானதுமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும் சட்டரீதியான கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றவும் சிறிலங்கா அரசைக் கோருதல்.

2. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து எடுக்கப்படவுள்ள விபரங்கள் உள்ளிட்ட, விரிவான செயற்திட்டத்தை விரைந்து முன்வைக்குமாறும், சர்வதேச சட்டவிதிகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து கவனம் செலுத்துமாறும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கோருதல்.

3. மேற்சொன்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தவதற்குரிய ஆலோசனைகளையும் தொழில்நுட்ட உதவிகளையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்தை இதனை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுவதுடன் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையகத்தின் 22 வது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தை வேண்டுதல்.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 28-11-2014, 02:41.51 AM ]
நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி சரியான வேட்பாளர் ஒருவரை நிறுத்தவில்லை என பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
[ Friday, 28-11-2014, 02:35.45 AM ]
சுற்றாடல்துறை பிரதியமைச்சர் அப்துல் காதர், தமக்கு இனந்தெரியாத ஒருவர் தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
[ Friday, 28-11-2014, 02:14.55 AM ]

அமைச்சர்கள் அரசாங்கத்தை கடுமையான கெட்டவார்த்தையில் திட்டித் தீர்ப்பதாக முன்னாள் அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

[ Friday, 28-11-2014, 02:09.39 AM ]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மூன்றாம் முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நீதியடிப்படையில் தடையில்லை என்று உயர்நீதிமன்றம் வழங்கிய சட்டவிளக்கத்தில் சட்டமொழிக்கு பதிலாக அரசியல்மொழி எழுதப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

[ Friday, 28-11-2014, 02:08.46 AM ]
சார்க் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட அரச தலைவர்கள் மூன்றாவது தடவையாகவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
[ Thursday, 27-11-2014 14:03:22 GMT ]
ஆப்கானிஸ்தானில் பெண் ஒருவர் 25 தலீபான் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
[ Thursday, 27-11-2014 12:54:54 GMT ]
குஷ்பு காங்கிரஸில் நேற்று தான் இணைந்தார் அதற்குள் 2016ம் ஆண்டின் முதல்வர் என்ற பெயரில் பேஸ்புக் பக்கத்தை திறந்து விட்டார்கள்.
[ Thursday, 27-11-2014 13:27:23 GMT ]
பவுன்சர் பந்தில் அடிபட்டு பிலிப் ஹியூக்ஸிற்கு ஏற்பட்டிருக்கும் இத்தகைய காயம் அரிதானது என்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டோனி கிராப்ஸ் தெரிவித்துள்ளார்.
[ Thursday, 27-11-2014 10:55:16 GMT ]
பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
[ Thursday, 27-11-2014 02:49:59 GMT ]
மாவீரர்களை போற்றும் மாவீரர் தினம் இன்று. நம் பிறப்பிற்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Wednesday, 26-11-2014 00:43:03 ]
கதைக்கும் ஒவ்வொரு சொல்லும் இன்னொரு முனையில் யாராலோ (ஒட்டு) கேட்கப்பட்டுகொண்டே இருக்கும் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ஒவ்வொரு சொல்லையும் அளந்து கதைக்கும் தாயக உறவு நெஞ்சுக்குள் அடைகாத்து வைத்திருந்த கேள்வியை, ஆதங்கத்தை இறுதியில் அடக்க முடியாமல் கேட்கும் ' அண்ணை இருக்கிறார்தானே..அவர் இருக்க வேணும்' என்று..,