செய்தி
விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரை குறித்து பிரான்ஸ் தூதரகம் விளக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 03 சனவரி 2012, 01:40.32 PM GMT ]
பிரான்ஸில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவம் பதித்த எந்த முத்திரையும் உத்தியோகபூர்வ வெளியிடப்படவில்லை என்றும் அவ்வாறானதொரு முத்திரை பிரான்ஸ் தபாலகங்களில் விற்பனைக்கு வைக்கப்படவில்லை எனவும் இலங்கையிலுள்ள பிரான்ஸ் தூதரகம் இன்று அறிக்கை ஒன்றின் ஊடாகத் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பிரபாகரனிதும் மற்றும் புலிகள் இயக்கத்தின் சின்னங்கள் கொண்டதுமான முத்திரைகள் உத்தியோகபூர்வ பிரான்ஸில் வெளியிடப்பட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை.

பிரெஞ்சு தபால் சேவையான "லா போஸ்ட்" டில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிரத்தியேக முத்திரைகளை குறித்த அளவில் அச்சிட்டுக்கொள்ளும் அனுமதியை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.. இந்த வசதியை பயன்படுத்தியே தனி நபர்கள் சிலர் இவ்வாறான முத்திரைகளை அச்சிட்டுள்ளனர்.

இதேவேளை, முத்திரைகளுக்கான கட்டளை கொடுக்கப்பட்ட போது, அவை உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்பதை அதிகாரிகள் கவனிக்க தவறியும் உள்ளனர் என்பதை லா போஸ்ட் உணர்ந்துள்ளது.என்றும் அது தெரிவித்துள்ளது.

அத்துடன் புலிகள் பயங்கரவாத இயக்கமாக ஐரோப்பிய ஒன்றியத்தினால். பட்டியல் படுத்தப்பட்டமை குறித்து பிரெஞ்சு வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ள நிலையில் இந்த முத்திரிகைகள் மேலும் அச்சிடப்படமாட்டாது எனவும் லா போஸ்ட் தெரிவித்திருந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Content of Popup
பிந்திய 5 செய்திகள்
[ Friday, 31-10-2014, 10:55.48 AM ]
நாடு முழுவதும் 150 மில்லி மீட்டரையும் தாண்டி கொட்டும் பலத்த மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிப் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[ Friday, 31-10-2014, 10:49.03 AM ]
கொழும்பு எரிபொருள் நிலையங்களில் டீசல், பெற்றோல் விற்கப்படும் விலைக்கு 50, 60 சதம் அதிகமாக வேறு பகுதிகளில் விற்கப்பட்டு வந்த நிலையில் நாளை தொடக்கம் அந்த நடவடிக்கை நிறுத்தப்படும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
[ Friday, 31-10-2014, 10:40.42 AM ]
பதுளை மாவட்டத்தின் கொஸ்லாந்த, மீரியபெத்த தோட்டப் பிரதேசங்களில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பகுதிகளிலும் இருந்து உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
[ Friday, 31-10-2014, 10:10.43 AM ]
போதைப் பொருள் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்தியாவின் திஹார் சிறைச்சாலைக்கு மாற்ற கோரி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
[ Friday, 31-10-2014, 10:01.40 AM ]
ஜனாதிபதியின் வருகை காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால், இடம்பெயர்ந்த மக்கள் கழிவறைக்கு கூட செல்ல முடியாது பெரும் சிரமங்களை அனுபவித்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[ Friday, 31-10-2014 10:18:45 GMT ]
சீனாவில் பெண் ஒருவர் தனது திருமணத்தின் போது பாட்டி போன்று வந்ததால் காதலன் ஓட்டமெடுத்துள்ளார்.
[ Friday, 31-10-2014 06:44:08 GMT ]
அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக நடந்த ராமதாஸ் பேத்தியின் திருமணத்தில், சந்தானம் பர்ஸை பறிகொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
[ Friday, 31-10-2014 07:50:14 GMT ]
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் சங்கக்காரா இந்தியாவுடனான ஒரு போட்டியில் விசித்திரமாக ஆட்டமிழக்க இலங்கை அணி தோல்வியை தழுவியது.
[ Friday, 31-10-2014 07:53:47 GMT ]
முழுமையான தானிய வகையை சேர்ந்த ஓட்ஸில், பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
[ Thursday, 30-10-2014 08:25:48 GMT ]
மன்மதன் பாஸ்கி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியிருக்கும் காமெடி படைப்பு ஊக்குவிப்பு.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற
[ Friday, 31-10-2014 02:47:48 ]
இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம் அண்மையில் கொழும்பில் நடைபெற்றபோது தான் இந்தியா புதிதாக நியமித்துள்ள பாதுகாப்பு அதிகாரி பற்றிய செய்தியொன்று ஊடகங்கள் மத்தியில் வெளிச்சத்துக்கு வந்தன.