செய்திகள் - 17-07-2012
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 11:58 PM]
| இலங்கைப் பிரச்சினையில் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 11:48 PM]
| கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வேட்பாளர் நியமன விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளிடையே பெரும் இழுபறி நிலை தோன்றியுள்ளது. இதனால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:22 PM]
| மன்னார் மூர்வீதி காட்டுப்பள்ளிவாசல் பகுதிக்கு பின் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பின்புறமாக உள்ள மலசல கூடத்திற்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைக்குண்டுகளை நேற்று திங்கட்கிழமை காலை முருங்கன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 04:32 PM]
| ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளத்தின் அலுவலகம் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் முற்றுகையிடப்பட்டமை மற்றும் அதன் ஊழியர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 04:30 PM]
| சிங்களப் பத்திரிகைகளை வாசிக்க வேண்டாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் என். எல். ஏ. கருணாரட்ன தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 04:11 PM]
| வட பகுதியில் காப்புறுதி நிறுவனங்கள், தழிழ் மக்களது பணத்தை சூறையாடும் நோக்கிலேயே செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய யாழ்.வணிகர் சங்கப்பிரதிநிதிகள், காப்புறுதி நிறுவனங்களின் சந்தைப்படுத்தலில் சிக்கிவிடாது செயற்படுமாறும் பொது மக்களிடம் கோரியுள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 03:58 PM]
| அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் திசார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று கிறீன் கட்சியின் செனட் சபை உறுப்பினர் லீ றியானொன் கோரிக்கை விடுத்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 03:31 PM]
| அடிக்கு அடி இராணுவ பிரசன்னம் இருக்கும் யாழ். குடாநாட்டில் வீடுகள் தாக்கப்படுவதும், கழிவு எண்ணெய் வீசி எச்சரிக்கப்படுவதும், எவரால் நடத்தப்படுகின்றன என்பதை ஊகிப்பது கஷ்டமானது அல்ல. இந்த பின்னணியில், கழிவு எண்ணெய் ஊற்றி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாளைய போராட்டம் இன்றே ஆரம்பித்து வைக்கப்பட்டுவிட்டது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 03:08 PM]
| இலங்கையின் தற்போதைய அரசியலானது அலிபாபாவும் 40 திருடர்களும் நிலையை பிரதிபலிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:50 PM]
| மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டிருந்தால் முஸ்லிம் முதலமைச்சர் பதவியை இலகுவாக கைப்பற்றியிருக்கு முடியும். அவ்வாறில்லாவிடினும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டிருக்கலாம். அதனால் தான் சுயேட்சை குழுவாக போட்டியிட உள்ளதாக அஸாத் சாலி அறிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:40 PM] [   ]
| தமிழ் தேசியக் மக்கள் முன்னணியின் கட்சி உறுப்பினர்களின் வீடுகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:28 PM]
| மட்டக்களப்பு கடற்பகுதியில் சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 42 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:09 PM]
| கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்புமனுவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை காலை சமர்ப்பிக்கப்படும் வாய்ப்புள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தகவல்கள் மூலம் அறியமுடிகிறது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:56 PM]
| யாழ். நெல்லியடி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெறுவதற்கு பொலிஸார் கடும் பிரயத்தனம் எடுத்திருந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கின்றது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:07 PM] [  ]
| தமிழகத்தின் நாமக்கல் அருகே இலங்கைத் தமிழ் அகதி முகாமைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வாயில் மண் வைத்து அடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 12:42 PM]
| யாழ். குடா நாட்டில் இராணுவப் பிரசன்னம் அதிகமாயிருக்கும் நிலையில் வீடுகள் தாக்கப்படுவதும், கழிவு எண்ணெய் வீசி எச்சரிக்கப்படுவதும், எவரால் நடத்தப்படுகின்றன என்பதை ஊகிப்பது கஷ்டமானது அல்ல. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 12:37 PM]
| கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கச்சதீவு கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட செய்தி பொய்யானது என்று தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 12:26 PM]
| யாழ்.வடமராட்சி பிரதேசத்'தில் உள்ள நெல்லியடி பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெறுவதற்கு பொலிஸார் கடும் பிரயத்தனம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 12:21 PM]
| நாட்டின் தற்போதைய நிலை குறித்து தனது அதிருப்தியை கண்டியிலுள்ள மல்வத்தை தேவாலயத்தில் மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரரான திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், நாமல் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வெளிப்படுத்தியுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 11:55 AM] [  ]
| இலங்கையின் வரலாற்றில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை சிக்கலிற்கான சமகாலத் தீர்வாக கனடா நான்கு முக்கிய நிபந்தனைகளை தற்போதைய ஆளும் அரசிற்கு விடுத்துள்ளதாக கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் றிக் டிஸ்ரா தமிழர்களிடம் தெரிவித்தார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 11:49 AM]
| மூன்று தமிழ் கட்சிகள் இணக்கப்பாட்டுடன் போட்டியிடும் சப்ரகமுவ மாகாண சபைக்கான பொது பட்டியலில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வேட்பாளர்கள் எவரும் கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணி பொதுசெயலாளர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 11:39 AM]
| சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் அச்சுறுத்தலால் இலங்கையில் வாழ வழியற்று அவுஸ்திரேலியா நாட்டில் அகதி அந்தஸ்துக் கோரி இருந்த தமிழ் இளைஞனின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்பட இருக்கின்றார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 09:44 AM]
| எம்பிலிபிட்டிய பிரதேச சபையின் தலைவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த விஜய விதானகே, ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று இணைந்துகொண்டுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 08:47 AM]
| ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி நினைத்தால், இனி தமது எஞ்சிய வாழ்நாளில் ஒருபோதும் ஈழம் குறித்தோ, ஈழத்தமிழர்கள் குறித்தோ பேசாமல் இருப்பது ஒன்றே அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாகும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 08:19 AM]
| தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கு அரசாங்கம் சிங்கள மொழியை கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 08:13 AM]
| அம்பாறையில் முஸ்லிம்களுக்கான கரையோர மாவட்டம் மற்றும் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்குத் தமிழ் பேசும் அரச அதிபர்கள் நியமனம் ஆகிய இரண்டு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடப்போவதில்லை என முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 08:02 AM]
| முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் மேற்கில் மக்கள் மீள்குடியமர்ந்த வீடுகளிலுள்ள பொருள்கள் யாவற்றையும் இராணுவத்தினர் தம் முன்னாலேயே ஏற்றிச் செல்கின்றனர் என்று அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:58 AM]
| கிழக்கு மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே ஒதுக்கப்படுவதாக கூறப்பட்ட 12 ஆசனங்க்களில் ஒன்று இரவோடு இரவாக குறைக்கப்பட்டிருக்கிறது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:53 AM]
| தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை கொன்று விடுவதாகவோ, கடத்திச் செல்வதாகவோ அச்சுறுத்தி வர்த்தகர்களிடம் கப்பம் கோரும் குழுவொன்று செயற்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:48 AM]
| ஜனாதிபதியின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவின் குரலில் அவரைப் போன்று, விமானப்படைத் தளபதியிடம் உரையாடிய வின்கமாண்டர் பதவிநிலை வகிக்கும் விமானப்படை அதிகாரியொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:44 AM]
| கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர் அசாத் சாலி இன்று தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:35 AM]
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எதிர்வரும் 21 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதனை முன்னிட்டு வவுனியாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:22 AM]
| இலங்கை சிங்கள பெளத்த இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழனைக் கொன்று குவித்த குருதிக் கரைபடிந்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:06 AM] [  ]
| அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 8 சிங்களவர்கள் உட்பட 109 பேர் நேற்று மாலை வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 07:01 AM]
| புத்தளம், பாலாவி - மல்கஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த பெற்றோர் பிறந்து ஆறு நாட்களேயான பெண் சிசுவை விற்பனை செய்ய முயன்றுள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 06:59 AM] [  ]
| மன்னார், ஜோசப்வாஸ் நகர் (விடத்தல் தீவு) மீனவர்களுக்கு தொடர்ந்தும் தற்காலிகமாக கோந்தைப்பிட்டி இறங்கு துறை முகத்தில் கடல் தொழிலில் ஈடுபட மன்னார் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளமையுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 04:44 AM]
| அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் அனுப்பி வைப்பதாக பணம் பெற்று கடற் படையினரிடம் காட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 04:40 AM]
| யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் வீடுகள் மீது இனந்தெரியாதவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 04:30 AM]
| இலங்கையின் சூழ்நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாக, மல்வத்தை மஹாநாயக்க திப்பட்டுவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 03:31 AM]
| திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகனை மீட்டுத்தர, இனந்தெரியாத நபரொருவர் தொலைபேசி ஊடாக ஒரு கோடி ரூபா கப்பம் கோரியதாக காணாமல் போன தமிழ் இளைஞரின் தாய் தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 03:04 AM] [  ]
| தமிழகம் குன்னூரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்க சென்றிருந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்று காலை அங்கிருந்து வெளியேறினர். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:37 AM]
| கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை தாம் விரும்பி ஏற்கவில்லை. அது தம்மீது பலவந்தமாக திணிக்கப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் திருக்கோணமலைக்காக போட்டியிடும் முதன்மை வேட்பாளர் சிங்காரவேல் தண்டாயுதபாணி தெரிவிக்கிறார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:33 AM]
| ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:29 AM]
| பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாமா அஸ்மி பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு பத்து லட்ச ரூபா சன்மானம் வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:14 AM]
| கோல்டன் கீ கொடுக்கல் வாங்கல் மோசடி வழங்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் பெயரும் பிரதிவாதிகள் பெயர்ப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:13 AM]
| சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு வீர விபூஷண படடம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 02:05 AM]
| முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கட்சியில் இணைந்து கொள்வதாக இதுவரையில் தெளிவான கருத்து எதனையும் முன்வைக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:51 AM]
| கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு தேசிய சுதந்திர முன்னணி பஞ்சாயுத சின்னத்தின் கீழ் போட்டியிட தீர்மானித்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:29 AM]
| விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்புக்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:24 AM] [  ]
| இலங்கையின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆவணப்படத்தை வெடிகுண்டாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பிரிட்டனின் சனல்-4 தொலைக்காட்சி, அடுத்த வெடிகுண்டு ஒன்றை போட்டுள்ளது. இந்த வெடிகுண்டு யாருடைய தலையில் வந்து வீழ்ந்தது? புதுடில்லியின் தலையில்! |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:20 AM]
| யாழ். போதனா வைத்திசாலையின் பிரேத அறையில் உள்ள உரிமை கோரப்படாத சடலங்கள் மற்றும் மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட கழிவுகளை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பவானி பசுபதிராசா தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:04 AM]
| கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதாகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டுக்குள்ளிருந்து மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்த பணம், மோதிரம், தொலைபேசி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 01:01 AM]
| கொழும்பு கொம்பனித்தெருவைச் சேர்ந்த நபர் ஒருவர் திருமணமான தனது மகளை நிர்வாணப்படுத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டுக்காக கொழும்பு நீதிமன்றம் 3மாத சிறைத் தண்டனையும் 1500 ரூபா அபராதமும் விதித்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 12:54 AM]
| கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வேட்பாளர் பட்டியலில் 12 இடங்களை ஒதுக்கினால் அரசாங்கத்துடன் இணைந்து வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடலாம் ௭ன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் தீர்மானித்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 12:40 AM]
| யாழ். மாநாகர முதல்வரின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டியதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பளர் அங்கஜனுக்கு எதிரான வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. |
[செவ்வாய்க்கிழமை, 17 யூலை 2012, 12:36 AM]
| ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படமாட்டாது. மாறாக ஆவண பரிமாற்றமே இடம்பெறும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார். |
|
[ Friday, 24-05-2013 12:30:12 ]
| 'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள். |
|