செய்திகள் - 26-06-2012
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 11:45 PM]
| இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கடந்த ஆறாம் திகதி முதல் இருபத்தொரு நாள்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 11:33 PM]
| தமக்குத் தாமே தீ மூட்டி தற்கொலைக்கு முயற்சித்த இளம் கர்ப்பிணித் தாயொருவர் சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் பரிதாபமாக மரணமான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 05:26 PM]
| உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு எதிர்வரும் யூலை 22 ஆம் திகதி 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 03:48 PM]
| பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டு வழக்குகளில் இருந்து யாழ். மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 03:43 PM]
| நாட்டின் பல பாகங்களிலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 5 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 03:32 PM] [  ]
| இலங்கை ஊடகவியலாளர்கள் பற்றிய 'மௌனிக்கப்பட்ட குரல்கள்' என்னும் ஆவணப்படம் இவ்வாரத்தின் முற்பகுதியில் 'மனித உரிமை கண்காணிப்பகத்தின் திரைப்பட விழா 2012' இல் திரையிடப்பட்டது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 03:06 PM]
| மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து நாடு முழுவதிலும் தாதிமார்கள் நாளைய தினம் சுகயீன தின விடுமுறைப் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 02:35 PM]
| திருமுறிகண்டியில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட பொதுமக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தி, மெனிக்பாம் முகாமுக்கு விரட்டியடித்ததாக வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 02:00 PM] [  ]
| உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளை எதிர்வரும் யூலை 1ஆம் திகதியன்று கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடத்தவுள்ள சர்வதேச தமிழர் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சி. சிறீதரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள். |
(2ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:49 PM]
| இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கொழும்பு உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:26 PM]
| வவுனியா சிறைச்சாலையில் மன்னார் கைதிகளிடம் தொடர்ந்தும் பணம் கேட்டு தாக்கப்படுவதாகவும் இதற்கு சிறைக்காவலர்களும் உடந்தையாக உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:16 PM]
| யாழ். புகையிரத நிலையத்திற்குள் பெண் ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:12 PM]
| இலங்கையின் வடக்கில் மனிதாபிமான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில், ஐக்கிய நாடுகள் சபைக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:01 PM]
| பருவமழை தாமதமாவதால் இலங்கையில் கடும் வரட்சி ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்கள் வற்றியுள்ளதால், விவசாயம், நீர் மின்உற்பத்தி என்பன கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:57 PM]
| 2011 ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இசட் வெட்டுப் புள்ளிகளை இரத்து செய்யுமாறு உயர்நீதிமன்றம் விடுத்துள்ள தீர்ப்பு தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று பலவிதமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:44 PM]
| ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தலைவர் சரத் பொன்சேகாவின் தனிப்பட்ட செயலாளர் சேனக ஹரப்பிரிய டி சில்வா, வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்த மனு கொழும்பு மேல்நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:38 PM]
| தமிழர் தாயகத்தினை ஆக்கிரப்புச் செய்துள்ள சிறிலங்கா இராணுவத்தின் நில அபகரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டங்கள் கனடாவில் ரொறன்றோ, வன்கூவர் ஆகிய இருவேறு இடங்களில் இடம்பெறுகின்றன. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 11:10 AM]
| நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இரண்டு பக்க ஆவணத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனிடம் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கொடுத்ததாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று வெளியிட்ட தகவலை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மறுத்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 10:54 AM] [  ]
| இலங்கைத் தீவில் தமிழீழம் அமைக்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 10:37 AM]
| எமது நிலத்தை தந்து அந்த நிலத்தில் எம்மை வாழ விடுங்கள் என அரசாங்கத்திற்கு மிகவும் நாகரிகமான முறையில் தமிழ் மக்கள் சொல்லியிருக்கின்றனர். இதனைப் புரிந்துகொண்டு எம் மக்களின் காணிகளிலிருந்து படையினரை விலக்கி, மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 09:48 AM]
| தனது ஆட்சிக் காலத்தில் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்ததே தான் செய்த மிகப் பெரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 08:40 AM]
| அவுஸ்திரேலியாவில் தஞ்சம் பெற்றுள்ள இலங்கை அகதிகளை தடுத்து வைக்கும் பொருட்டு புதிய அகதி முகாம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக த ரேடியோ நியுசிலேண்ட் தகவல் வெளியிட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 07:55 AM]
| கனடாவின் குடியேற்றச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்றை கனேடிய அரசு அறிமுகம் செய்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 07:26 AM]
| குவைத் நாட்டில் சாரதியாகப் பணிபுரியும் இலங்கை முஸ்லிம் நபர் ஒருவர் சுமார் 60,000 குவைத் தினார் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 07:24 AM]
| மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 ஆம் ஆண்டு இடம் பெற்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான இன வன்முறைகளின் எதிரொலியாக ஏறாவூர் நகர பிரதேசத்திலிருந்து அன்று வெளியேறிய நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் இதுவரை மீள்குடியேற்றப்படாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 07:03 AM]
| இலங்கை அகதிகள் 492 பேரை எம்வீ சன் சீ கப்பல் மூலம் கனடாவுக்குக் கடத்திய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோயல் கனேடியன் மவுன்டன்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
(3ம் இணைப்பு)
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 06:59 AM] [   ]
| இராணுவம், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 06:57 AM]
| கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 2, 500 பேரை இலங்கை கடற்படையினர் கூரிய ஆயுத முனையில் விரட்டியடிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 03:28 AM]
| முல்லைத்தீவு, அலம்பில் தங்கபுரம் பகுதியில் நேற்று பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 02:59 AM]
| தெஹிவளை, கல்கிஸ்ஸை ஹோட்டல் சந்தியில் அமைந்துள்ள ரயர் விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:56 AM]
| நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்யும் நோக்கில் புதிதாக 75 நீதவான்கள் நியமிப்பது தொடர்பான யோசனைத் திட்டத்தை நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் முன்வைத்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:47 AM]
| அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக சில அரசியல்வாதிகள் பொய் சொல்கின்றார்கள். எமக்கள் இந்தப் பொய்களைக் கேட்டு ஏமாற்றமடைவதாக சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:42 AM]
| உயிரிழந்த படைவீரர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:29 AM] [  ]
| சிங்கள இனவெறி அரசால் தமிழீழத்தில் சிங்கள மயமாக்கல், நிலஅபகரிப்பு தொடரும் இனப்படுகொலை மற்றும் மன்னார் ஆயருக்கு விடுக்கப்படிருக்கும் கொலை அச்சுறுத்தலை சுட்டிக்காட்டி யேர்மனி Bonn நகரில் அரசியல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:21 AM]
| இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை ௭திர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திக்கவுள்ளது. இதன்போது தீர்வு விடயம் மற்றும் தற்போதைய வடக்குச் சூழல் குறித்து சிவ்சங்கர் மேனனுக்கு விரிவாக விளங்கப்படுத்தப்படும் ௭ன்று கூட்டமைப்பு குறிப்பிட்டது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:17 AM] [  ]
| தமது மீள்குடியமர்வு தொடர்பில் அரச திணைக்கள அதிகாரிகளும், முசலி பிரதேச செயலக அதிகாரிகளும் எவ்வித அக்கறையும் இன்றி செயற்பட்டு வருவதாக கடந்த 10 தினங்களுக்கு முன் மீள் குடியமர்ந்த முள்ளிக்குளம் மக்கள், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:14 AM]
| பிரிவினைவாத சதிகாரர்களின் பேச்சுக்களைக் கேட்டு மீண்டும் தமிழ் மக்கள் அழிவுகளை தேடிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் உள்நாட்டில் தனிநாட்டுக் கொள்கைகளுக்கோ தீர்வுகளுக்கோ இனி ஒருபோதும் இடமில்லை ௭ன்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 01:07 AM]
| மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட எருவிட்டான் கிராமத்தில் மீள்குடியேறிய நிலையில், கடந்த 15 வருடங்களாக எவ்வித வாழ்வாதார உதவிகளுமற்று, அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக குறித்த கிராம மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் முறையிட்டுள்ளனர். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:54 AM]
| வடக்கில் இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிராக திருமுறிகண்டியில் இன்று நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தை தடுப்பதற்கு பல சதி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எது நடந்தாலும் எங்கள் மக்கள் சார்ந்த போராட்டம் நடைபெறும். அதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.' என மாவை சேனாதிராஜா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:46 AM]
| பளை, புதுக்காடு பகுதியில் நேற்று திங்கட்கிழமை டிப்பர் வாகனம் மோதியதில் ஒன்றரை வயதான குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:32 AM]
| தனக்கெதிரான அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகங்களில் தான் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:23 AM] [  ]
| தமிழீழ விடுதலைப் போரின் தடைநீக்கிகளாக, உயிராயுதமாகி, தம்மையே அர்ப்பணித்து விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்து, வீரகாவியமாகிவிட்ட தேசப்புயல்களை நினைவுகொள்ளும் "தற்கொடையாளர் நாள்" நிகழ்வு எதிர்வரும் ஜுலை- 5 இல் பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:22 AM] [  ]
| 26.06.1999 அன்று மன்னார் மாவட்டம் சன்னார் பகுதியில் “ரணகோச” நடவடிக்கை மூலம் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முற்றுகைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஐயன் மற்றும் லெப்.கேணல் தணிகைச்செல்வி உட்பட்ட 75 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:13 AM] [  ]
| 26.06.2000 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா படையினரின் “உகண” ஆயுதக் கப்பலை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:09 AM] [  ]
| தமிழர்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவதுடன், தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை இருந்த இடம்தெரியாமல் தொலைந்து மறைந்துபோய்விடச் செய்யும் திட்டமிட்ட நாசகார நகர்வை ராஜபக்ஸ தலைமையிலான பௌத்த சிங்களப் பேரினவாத அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:01 AM] [  ]
| இலங்கையின் வடக்கு கிழக்கில் போரின் போது கணவன்மாரை இழந்த பெண்களுக்கு உதவும் முகமாக மலேசிய அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது. |
[செவ்வாய்க்கிழமை, 26 யூன் 2012, 12:00 AM]
| வன்னியின் திருமுறிகண்டியில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வேல்ட் நியூஷ் ரிப்போட் என்ற இணையத்தளம் தெரிவித்துள்ளது. |
|
[ Sunday, 16-06-2013 04:00:13 ]
| இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான். |
|