கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறிலங்கா இராணூவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் நான்கு அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா படையினரின் ஆழஊடுருவும் அணியினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இரு வேறுபகுதிகளில் பொருத்திய கிளைமோர் வெடித்ததில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
சுவிஸ் சூரிக் அல்பிட்குயிஸ்லி மண்டபத்தில் பிரிகேடியர் சு.ப தமிழ்செல்வன் அவர்களுக்கு அகவணக்க நிகழ்வு
[November 04 2007 04:26:58 PM]
[pathma]
இன்று சுவிஸ் சூரிக் அல்பிட்குயிஸ்லி மண்டபத்தில் (04.11.07) மதியம் ஐரோப்பிய நேரப்படி 14.30 மணியளவில் நினைவுச்சுடரினை தமிழீழ விடுதலைப்புலிகளின் சுவிஸ் கிளைப்பொறுப்பாளர் திரு.குலம் அவர்கள் ஏற்றி வைக்க ஆரப்பமாகியது.